பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μι Αϊ ι"ιιιιι. டுத் தளத்தில் பாரதி |- ரீனிவாசன் மொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே மொய்க்கும் கிருத யுகத்தினையே கொனர்வேன்" என்று பாரதி நமக்கு செய்தி சொல்கிறார். இது பாரதி எடுத்துக் கொண்ட விரதம், பாரிடை மக்களே கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன் என்பது பாரதி நமக்கு வழிகாட்டும் புது நெறியாகும். "பாரதி லகூஷிமி பிரார்த்தனையில், செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மையேறி வாழ்வேன் இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்" என்று சாதனை செய்ய லகூஷிமியை வேண்டுகிறார். இந்த வேண்டுதல் தனக்காக மட்டுமல்ல, பாரதி உலகத்திற்காகவும் வேண்டுகிறார். பாரதி தனக்குத்தானே மட்டுமல்லாமல் உலகமனைத்துக்கும் வேண்டுவன என்று அத்தலைப்பிலேயே தனது கவிதை வரிகளிலேயே அந்த வேண்டுதலைக் குறிப்பிடுகிறார். 'மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும்" என்றும் பாடுகிறார். "கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் உண்மை நின்றிடவேண்டும்" H1 என்று வேண்டுகிறார். இந்த வேண்டுதல்களில் கடும் முயற்சியினாலும் நல்ல சிந்தனையினாலும் கடுமையான உழைப்பின் மூலமும் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் பல உண்டு. அதற்காக நம்மை ஊக்கமூட்டி நெறிப்படுத்தக் கருதுகிறார் பாரதி. "மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன் வறுமை என்பதை மண் மிசைமாய்ப்பேன் தானம், வேள்வி, தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலை பெறச் செய்வேன் ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்" என்றெல்லாம் சூளுரைத்து இவைகளையெல்லாம் செய்து முடித்திடகாளி எனக்குப் பலம் தருவாள் என்று பாரதி பாடுகிறார். பாரதி தான் வாழ்ந்த காலத்தில் பலவகையான மனிதர்களையும் கண்டிருக்கிறார். சந்தித்திருக்கிறார். பேசியிருக்கிறார். பழகியிருக்கிறார். அவர்களுடன் பணியாற்றியிருக்கிறார். தான் ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன், ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பாரத நாட்டின் பலவகைப்பட்ட மனிதர்களையும் பற்றி நேரில் கண்டு கற்பனையில் கண்டும் அவர்களைப் பற்றி சிந்தித்திருக்கிறார். அதனால் மனிதர்களின் பெருமைகளையும் பாடியுள்ளார். சில மனிதர்களின் சிறுமைகளையும் சுட்டிக்காட்டிமனம் கொதித்துப் பாடியுள்ளார். 'நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்" என்று பாடினார். "சாத்திரங்கள் ஒன்றும் காணார்' என்றும், சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் என்றும், "கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவு மிலார்" என்றும் "எண்ணிலா நோயுடை யார் - இவர்