பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் i ாரதி -|| சீனிவாசன் மனிதனுக்காகவே படைக்கப் பட்டது எனவும், அதனால் மனிதன் அவைகளைத் தனக்காக எப்படியும் எடுத்துக் கொள்ளலாம், பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஏற்பட்ட கருத்துகள், தத்துவங்கள் மேலோங்கி, இன்று உலக அமைப்பில் சிதைவுகள் ஏற்பட்டும் இயற்கைச்சூழலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டு அதனால் மனிதன் மற்றும் இதர உயிரினங்களின் வாழ் நிலைக்கே அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் பாரதியை நினைவுகூர வேண்டும். இந்திய தத்துவங்களே இயற்கையோடிசைவான வாழ்க்கை முறையின் தத்துவங்களாகும். அது பாரதப் பண்பாட்டின் அடிப்படைத் தத்துவமாகும். நமது தெய்வங்களுக்குள்ள வாகனங்களும் கோவில்களில் உள்ள குளங்களும் ஸ்தல விருட்சங்களும் இயற்கையோடு இணைந்த இசைவான வாழ்க்கை அமைப்பைக் குறிப்பனவேயாகும். அதாவது நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள், விருட்சங்கள் மற்றும் இதர தாவரங்கள், ஜீவராசிகள், நீர்நிலைகள், மலைகள் முதலியன வெல்லாம் நாம் வணங்கும் தெய்வங்களோடு இணைந்தவை. அவை நமது வணக்கத்திற்கும் பூசைக்கும் உரியன. இந்தத்தத்துவங்கள் எல்லாம் இடைக்காலத்தில் வளர்ச்சி குன்றிப்போயின, தேக்கமடைந்து நின்று விட்டன. சிலவை பூசை அறைகளிலும் சில தனி நபர் பாதுகாப்பிலும் முடங்கிப் போய் விட்டன. அன்னியத்தன்மை கொண்ட சில தத்துவங்களின் தாக்கத்தாலும் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுப் போயின. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவை தாழ்த்தப்பட்டு புறக்கணிக்கப் பட்டன. மூடப் பழக்கவழக்கங்களுடனும் சில பொய்மைச் சாத்திரங்களுடனும் இணைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. ஆனால் அண்மைக் காலமாக அனுபவத்தில் சில உண்மைகளை, கடினமான உண்மைகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள சில புதிய விழிப்புணர்வுகளும் பல புதிய உண்மைகளை தரையின் மேல் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. உலகத்தைக் காக்க வேண்டும், அதை மனிதன் வாழ்வதற்கு உகந்ததாக நிலைநிறுத்த வேண்டும். என்னும் கருத்துகள் வலுவாகத் தோன்றி வளரத் தொடங்கியுள்ளன. காற்று. கடல், மலைகள், காடுகள், ஆறுகள், இதர நீர்நிலைகள், கோள்கள் முதலிய அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டும். மாசு படாமல் காக்கப்பட வேண்டும். புல்பூண்டு, செடி, கொடி மரம் முதலிய தாவரங்கள், புழுக்கள், பூச்சிக்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய கால் நடைகள் விலங்கினங்கள், பறவையினங்களையும் அனைத்து உயிரினங்களையும் இயற்கையையும் காக்க வேண்டும் என்னும் குரல் விஞ்ஞான உலகிலும் தத்துவஞான உலகிலும் எழுந்துள்ளன. "உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நிங்கலா அலகிலா விளையாட்டுடையர் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பது கம்பன் வாக்கு ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் என்று கம்பன் குறிப்பிட்டிருப்பது கம்பனின் சிறப்பும் தமிழின் சிறப்புமாகும். இங்கு முத்தொழிலில் அழித்தலும் என்று கம்பன் கூறவில்லை. நீக்கலும் என்று குறிப்பிட்டிப்பது தனிச்சிறப்பாகும். நீக்கல் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சகல விதமான பொருள்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அந்த மாற்ற்றம் என்பது ஒரு நிலையிலிருந்து நீங்கி மறுநிலை அடைவதாகும். விதை என்னும் நிலை நீங்கி செடி என்னும் நிலைக்கு வருவதாகும். கருமேகக் கூட்டம் என்னும் நிலை நீங்கி மழைத்துளிகள் என்னும் நிலை பெறுவதாகும்.முட்டைஎன்னும் நிலை நீங்கி குஞ்சு என்னும் நிலைக்கு மாறுவதாகும். மங்கை என்னும் நிலை நீங்கி மடந்தை என்னும் நிலைக்கு மாறுவதாகும். இந்த மாற்றம் நிலை மாற்றத்தைக் குறிப்பதாகும். மாற்றம் என்பது உலகம் உலகத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இடைவிடாமல் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்பதாகும். இந்த மாற்றம் இயற்கையானது. இதை இந்திய தத்துவங்களும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. 'உலகின் எல்லாத் தோற்றங்களும் எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும் எல்லா கோலங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா உயிர்களும், எல்லா பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லா செயல்களும் ஈசன்மயம் ஆதலால் ஒன்றுக் கொன்று சமானம்' என்று பாரதி தனது பகவத் கீதை தமிழ் மொழியாக்க நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். 'கண்ணபிரான் மனிதருக்குள் சாதிவேற்றுமையும் அறிவுவேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமேயின்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று சொல்லுகிறார்." என்று பாரதியார் அம்முன்னுரையில் மேலும் குறிப்பிடுகிறார். 'இயற்கை விதிகளை அனுசரித்தே வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானமாகும். இதையே ஆங்கிலேய அறிஞர்கள் காமன்சென்ஸ் என்பர். சுத்தமான, மாசுபடாத கலங்காத, அஞ்சாத, பிழைபடாத சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும்." என்று பாரதி குறிப்பிடுகிறார்.