பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 123 சகல செல்வங்களையும்தேவைகளையும் பெறும் அளவிற்கு அனைத்து பொருள்களையும படைக்கவும், ஆக்கவும், சேர்க்கவும், சேமிக்கவும், சேகரிக்கவும் பாதுகாக்கவும் பராமரிக்கவும், சீராக செம்மையாக வகுக்கவுமான சமுதாய நிர்வாகம், உற்பத்திமுறை, அரசு, அமைச்சு, நிர்வாகம், சட்டம், நீதிநெறிமுறைகள், கலை, இலக்கியம், உடல்வளம், மனவளம், அறிவுவளம், முதலிய சகல பண்பாட்டுத்துறை வளர்ச்சியும் பெருக்கமும் அடங்கியதாகும். மூன்றாவதாக இன்பம் என்பது இனிமையான, மகிழ்ச்சியான, மனநிறைவான குடும்ப அமைப்பாகும். மனித சமுதாயத்தின் ஆகச்சிறிய கூறு குடும்ப அமைப்பாகும். இன்பம் என்பது பெறும் ஆண்பெண் பாலுறவுபற்றியது மட்டுமல்ல. பாலுறவு மட்டுமல்ல குடும்ப அமைப்பின் அடிப்படை அக்குடும்ப அமைப்பில் கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோர் அடங்கிய அமைப்பாகும். இந்து தர்ம சம்பிரதாயத்தில் குடும்பம், கூட்டுக்குடும்பம் என்னும் கருத்துவடிவம் மிகவும் முக்கியமானதாகும். இதில் கணவன் குடும்பத்தலைவன், மனைவி குடும்பத்தலைவியாகும். குடும்பத்தை சிறப்புற நடத்திச் செல்வதில் இருவருக்கும் கூட்டுபொருப்பு அமைந்திருக்கிறது. குடும்ப அமைப்பில் குழந்தைகள் முக்கிய இடம் பெறுகிறார்கள். கணவன் மனைவி காதலின்பம், குழந்தைகளின்பம் என்பதில் கணவன் மனைவி உறவு கடமைப்பாடும் குழந்தையின்பம் பயன்பாடுமாகும். குழந்தைகள் பெறுவது அவர்களை திடமாக வளர்ப்பது, அவர்களுக்குக் கல்வியளித்து அறிவாளிகளாகிகுவது, உடல் வலுவை வளர்த்து பல வானாக்குவது, குடும் பத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக அவர்களைப் பக்குவப்படுத்துவது, முதலியன குடும்ப அமைப்பில் அடங்கும். இக்குடும்ப அமைப்பில் மற்றொரு முக்கியமான கூறு முதியோர்களைப் பராமரித்துப் பாதுகாப்பதாகும். அக்குடும்பக் கடமைகள் சமுதாயக் கடமைகளோடு, அரசின் கடமைகளோடு அறம்பொருள் அமைப்புகளோடு இணைந்ததாகும். இதை இந்தியப்பண்பாடு மிக அழுத்தமாக வற்புறுத்துகிறது. ஆனும் பெண்ணும் ச மநிலையில், சம உறவுநிலையில் கூட்டுப் பொருப்புடன், அத்துடன் தனிப் பொருப்புகளையும் இணைத்து கூட்டுத் தலைமையாக அமைவதே சீரிய சிறந்த குடும்பமாகும். அதில் ஆண் பெண் இருவருக்கும் உள்ள கடமைகளும் உரிமைகளும் வலியுறுத்தப்படுகின்றன. இதைப் பாரதி