பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | 24 பாரதி மிகவும் தெளிவாக, துல்லியமாக, விரிவாக, உறுதியாக எடுத்துக் கூறுகிறார். நான்காவதான வீடு என்பது பாரதியின்கருத்துப்படி எங்கோ உள்ள சுவர்க்கமோ, மோட்சமோ, முற்றும் துறந்த முக்தியோ அல்ல. இந்த உலகில் மனித வாழ்வு சகல செல்வங்களும் நலன்களும் இன்பங்களும் பெற்று முழுமையான விடுதலை பெறவேண்டும் என்பதாகும். பாரத நாடு ஆன்மீகத்தையே அதிகமாக வலியுறுத்துகிறது. ஆதாரப்பட்டிருக்கிறது என்னும் கருத்தை மாற்றி, அந்த ஆன்மீக நிலைக்கே கல்வி, செல்வம், பொருள், ஞானம் ஆகியவையே ஆதாரம் என்பதை இந்த நாட்டின் சீரிய சிந்தனை வழியில் நின்று பாரதி வலியுறுத்திக் கூறுகிறார். அறம்பொருள் இன்பம் விடு ஆகிய அனைத்திற்கும் கடின உழைப்பும் இடைவிடாத செயல்பாடும், செயல்திறனும் தொழிலும் தொழில் முயற்சியும் ஆதாரம் என்பது பாரதியின்கொள்கை, அத்தகைய கடின உழைப்பிற்கும் இடைவிடாத செயலுக்கும் தொழிலுக்கும் தொழில் முயற்சிகளுக்கும் இந்த நாடு, பாரத புண்ணிய பூமி உயர வேண்டும் என்பது பாரதியின் கொள்கையாகும். அதுவே பாரதி காட்டும் புதிய நெறியின் அடிநாதமாகும். தன்னைத்தான் ஆளும் தன்மையை ஒருவர் பெற்றுவிட்டர்ல் எல்லாப் பயன்களும் தாமே எய்தும் என்று பாரதி அழுத்தமாகக் கூறுகிறார். யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இரிையனாய், வாழ்ந்திடவிரும்பினேன் என்று பாரதி கூறுவது தனக்காக மட்டுமல்ல, நம் அனைவருக்குமாகும். வேண்டாதனைத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தையும் அருள்வது உன் கடனே என்று பாரதி பாரபட்சமும் பாகுபாடும் இல்லாமல் அனைத்து கடவுள்களையும் வணங்கி வேண்டுகிறார். அச்சமில்லை என்பது பாரதியின் தாரக மந்திரம் நாட்டின் விடுதலைக்கு, மனித சமுதாய விடுதலைக்கு முதல் நிபந்தனை அச்சம் நீங்க வேண்டும் என்பதாகும். பாரதி பல இடங்களிலும் தனது கவிதைகளில், அச்சம் திரும், அமுதம் விளை யும் என்றும், அச்சம் இல்லை அமுங் குதல் இல்லையென்றும், அண்டம் சிதரினாலும் அஞ்சமாட்டோம் என்றும், யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், என்றும் ஆசையைக் கொல்வோம் - புலையச் சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம் என்றும், அச்சமும் துயரும் இரு அசுரர் என்றும், அஞ்சேல் அஞ்சேல் என்றும் கூறி நமக்கு நல்லாண்மை சமைப்பவனை யென்றும், அச்சத்தைச் சுட்டங்கு சாம்பருமின்றி அழித்திடும்