பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 6 1. பாரதியின் பண்பாட்டு தளத்தின் அடிப்படை இந்தியப் பண்பாட்டு தளமே பாரதியின் பண்பாட்டுதளமாகும். இந்தியப்பண்பாட்டு தளத்தில் அடிப்படையாக "தர்மம்" என்று வழங்கப்படுகிறது. இந்த தர்மம், இந்திய தர்மம் என்று வழங்கப்படுகிறது. "தர்மம்" என்னும் சொல்லிற்கு தமிழில் "அறம்" என்றும் சொல்லை வழங்குகிறோம். வள்ளுவப்பெருமானின் முப்பாலில் முதல் பால் அறத்துப்பாலாகும். இங்கு தர்மம் என்னும் சொல் மிகவும் பரந்த பொருளில் கையாளப்படுகிறது. இந்து என்னும் சொல் இன்று பொதுவாக இந்து சமயம் அல்லது மதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அப்பொருள் தற்காலத்திய நடைமுறையில் நிலை கொள்ளப்படுகிறது. இந்து தர்மம் என்பது பண்டய கால பாரத தேசத்தில் சநாதன தர்மம் என்று அறியப்பட்டிருக்கிறது. நிலை நிறுத்தப்பட்ட உறுதிப்பட்ட மனித கடமைகளை வலியுறுத்திக் கூறப்பட்டதாகவே சநாதன தர்மம் கருதப்பட்டது. இந்து தர்மத்தைப் பொதுவாக ஏற்றுக்கொண்டு பல மதங்கள், சமயங்கள். வழிபாடுகள் வழிபாட்டு தெய்வங்கள் இந்தியமக்களிடையே நிலவிவருகின்றன. சிவ வழிபாடு, வைணவ வழிபாடு, சக்தி வழிபாடு, கணபதி வழிபாடு, அக்கினி வழிபாடு, முருக வழிபாடு, சிறுதெய்வ வழிபாடுகள், முதலிய சிலவகை மதங்கள் அல்லது சமயங்கள் இந்திய மக்களிடையில் பழக்கத்தில் உள்ளன. அத்துடன் புத்தம், சமணம் ஆகியவையும் தொடக்கத்தில் முரண்பட்டிருந்தன வாயினும் அவையும் பொது நீரோட்டத்தில் கலந்துவிட்டன. பின்னர் சீக்கியமும் சேர்ந்து விட்டது. பாரதி தனது கவிதைகளில் இந்திய இஸ்லாமியத்தையும் கிறிஸ்துவத்தையும் சேர்த்து விட்டார். அல்லாவும், யேஹோவாவும் பாரதி மூலம் இந்திய கடவுளர்களின் வரிசையில் சேர்ந்துவிட்டன. இன்னும் இந்தியதத்துவ ஞானத்தில் நாத்திகமும் ஒரு பகுதியேயாகும். தர்மம் என்னும் சொல்லிற்கு வெறும் மதம் அல்லது சமயம் என்பது மட்டும் பொருளல்ல (இந்து) தர்மம் என்பது ஒரு பொதுவான கருத்து வடிவமாகும். மதம் சமயம், மரபு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறை செயல்பாடுகள், நீதி நெறிமுறை, குணச்சிறப்புகள், குணத்தன்மைகள், சமுதாய ஒழுக்க நெறிமுறைகள், இன்னும் பல வேறுபட்ட கடமைகள் முதலிய பலவும் தர்மம் என்னும் சொல்லில் அடங்கும். தர்மம் என்னும் சொல் கடமை என்னும் சொல்லுடன் விரிவுபடும். எனவே இந்து தர்மம் என்பது வாழ்க்கை நெறிமுறையாக விரிவுபடும். தர்மம் என்பதையே அறம்