பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 132 கை வருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம், என்றும் உழைப்பையும் அறிவையும் தெய்வ நிலைக்கு பாரதி உயர்த்துகிறார். ஓங்கி கல்வி உழைப்பை மறந்தீர், மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ் வெனலாமோ என்று கல்வியையும் உழைப்பையும் மறந்தவரை பாரதி, கண்டிக்கிறார். செல்வம் எட்டும் எய்தி நின்றால் செம்மையேறி வாழ்வேன் என்றும் இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் என்றும் பாரதி தனது கொள்கை நிலையுடன் உறுதி கூறுகிறார். செல்வம் எட்டும் எய்தி நின்றால் செம்மையேறி வாழ்வேன் என்றும் இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் என்றும் பாரதி தனது கொள்கை நிலையுடன் உறுதி கூறுகிறார். ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரிகளும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய் என்று பாரதி சிரிதேவியை வேண்டுகிறார். தருவாய் தொழிலும் பயனும் என்று முருகனை வேண்டுகிறார். நீறுபடக் கொடும்பாவம் பிணி, பசி, யாவையும் இங்கு நீக்கி அடியாரைக் காக்குமாறு வேலவனை வேண்டுகிறார். திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து மகிழ்வுற்றிருப்போம் என்று கூறுகிறார். அறிவுதான் பரம ஞானமாகும் என்றும், நீதியாக அரசு செய்வர், நிதிகள் பல கோடி துய்ப்பர், நீண்ட காலம் வாழ்வர் தரை மீது என்று அரசியல் நெறிக்கு பாரதி இலக்கணம் கூறுகிறார். - ஆதாரசக்தி யென்றே அருமறைகள் கூறும், யாதானும் தொழில் புரிவோம், யாதும் அவள் தொழிலாம் என்று தேசமுத்து மாரியிடம் கூறுகிறார். - தொழில் பண்ணப்பெருநிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணை புரிதல் வேண்டும் எனறு தொடங்கி, "கல்லைவயிரமணியாக்கல் - செம்பைக் கட்டித்தங்கம் எனச் செய்தல் - வெறும் புல்லைநெல்லெனப் புரிதல் - பன்றிப் போத்தை சிங்கவேறாக்கல் - மண்ணை வெல்லத்தினிப்பு வரச் செய்தல் - என விந்தை தோன்றிட விந்நாட்டை - நான்