பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 138 பண்பாட்டு மரபு வழி அரசியல்கருத்தும் அனுபவமும் ஆகும். பாரதியின் இந்த வார்த்தைகள் நமது நாட்டு மக்களின் அரசியல் வாழ்வில் நமக்கு வழிகாட்டிச் செல்லும் கருத்தாகும். எல்லாவற்றிற்கும் மேலாக பாரதி காட்டும் அரசியல் மற்றும் பொதுநெறி "தர்மத்தின் வாழ்வதனை சூதுகல்வும் தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே யுலகங்கற்கும் வழி தேடி விதியிந்தச் செய்கை செய்தான் கருமத்தை மேன்மேலும் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் தருமத்தையப்போது வெல்லக் காண்போம் தனுவுண்டு காண்டிவ மதன்பேர் என்றான்" என்றுகூறிய பாரதியின் கவிதை வரிகள் என்றென்றும் நிலைத்து நிற்கும். அமரத்துவம் மிக்க கவிதைவரிகளாகும். உலகம் உள்ளளவும் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளளவும் பாரதியின் இந்தக் கவிதை வரிகள் கம்பீரநாதத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கும். பாரதியின் விடுதலை நோக்கின் பன்முகப் பரிமாணங்கள் பாரதி யின் விடுதலை லட்சியங்கள் பரந்த பல பன்முக பரிமாணங்களைக் கொண்டது. பாரதி காலத்தில் அன்னிய ஆட்சி வலுவாக அமர்ந்திருந்தது. ஆங்கிலேய ஆட்சியின் கொடுமைகள் மலிந்திருந்தன. பாரத மக்களுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தன. இம் என்றால் சிறைவாக ம், ஏன் என்றால் வனவாசம் என்னும் தமிழ் சொற்களில் பாரதி தனது அனுபவத்திலிருந்தே தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். மக்களுடைய வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக இருந்தது. பஞ்சம், பசி, பட்டினி, பட்டினிச்சாவுகள், வேலையின்மை, நோய், நொடி சுகாதாரக் கேடுகள், அறியாமை, மூடப்பழக்க வழக்க்ங்கள் தொல்லை இகழ்ச்சிகள், மலிந்திருந்தன. இன்னும் அடித்தட்டு மக்களிடையில் இந்தக் கொடுமைகள் மிக அதிகமாகப் பரவியிருந்தன. இந்த நிலைமைக்கு அன்னிய ஆட்சியின் கொள்ளைகளும் கொடுமைகளும் முக்கியமான முதன்மையான காரணமாக இருந்தன. வரிக்கொடுமை, வட்டிக் கொடுமையுடன் இயற்கைச் செல்வங்களும் ஆட்சியாளர்களால் சூரையாடப்பட்டன. பழைய பரம்பரைத் தொழில்கள், நசிவடைந்தது, புதிய தொழில்கள் வளரவிடாமல் தடுக்கப்பட்டன.