பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 139 இவையெல்லாம் நாட்டு மக்களின் வறுமை நிலையை மேலும் அதிகரிக்கச் செய்து கொண்டே இருந்தது. அதையே பாரதி 'பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ' என்று பாடினார். இந்த தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை. இன்னும் மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்ந்தனர்.என்று கூறினார். அதனால் நாட்டு மக்களின் பிணியும் வறுமையும் நையப் பாடினான். கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம், புலைமை அச்சம் முதலிய பேய்கள் எல்லாம் நிறைந்திருந்தன. அன்னிய ஆட்சியினர் பொருளினை சிதைத்தனர், மருளினைவிதைத்தனர் என்று பாடினார். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும் நிறைந்திருந்தன. ஊக்கமும் உள்வவியும்.உண்மையில்பற்று இல்லாமலும் மக்கள் பலரும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உலகத்து நாடுகளில் எல்லாம் (வையத்து நாட்டில் எல்லாம்) தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றது பாரத தேசம். புதிய ரஷ்யாவைப் பற்றிய பாடலில் கூட பாரதி இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேரிசைந்த பாவி என்றும் பொய் சூது தீமையெல்லாம் உழுது விதைத்தறுப்பாருக்கு உணவில்லை. பிணிகள் பலவுண்டு, பொய்யைத் தொழுதடிமைச் செ ய்வாருக்கு செல்வங்களுண்டு, உண்மை சொல்வோருக்கெல்லாம் எழுதரிய பெருங் கொடுமைச் சிறை யுண்டு, துக்கு ண் டே யிற ப் பதுண்டு, செம்மையெல்லாம் பாழாகி கொடுமையே அறமாகி இருந்ததாக, இந்திய நாட்டில் இருந்த அன்னிய ஆட்சியை நினைந்தே பாரதி பாடியிருக்கிறார். அத்துடன் இந்திய சமுதாயத்தின் உள்வலியும் குறைந்திருந்தது. சாதி மத வேறுபாடுகள், மாறுபாடுகள், பாகுபாடுகள், திண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளும் நிலவியிருந்தன. மெள்ளப்பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரவியிருந்தன. 'அஞ்சி அஞ்சிச் சாவார் மந்திரவாதியென்பார் எந்திர சூனியங்கள் என்பார் சிப்பாயைக் கண்டஞ்சுவார் யாரிடத்தும் பூனைகள் போல் அடங்கி நடப்பார் கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடியென்றால் அது பெரிதாமோ, சாத்திரங்கள் ஒன்றும் கானார் தம்மைச் சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்