பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 143 பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் என்றும், உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், மூத்த பொய்மைகள் யாவும் அழிக்கவும் மூடக்கட்டுகள் யாவும் தகர்க்கவும் பெண்ணுரிமையைப் பாடுகிறார். பெண்ணுரிமைக்கும் பெண் விடுதலைக்கும் புதுமைப் பெண்ணுக்குமான புதுமைக்கருத்துக்களைக் கூறி அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையைப் பாராட்டி பெண்மை விரத்தின் சின்னமாக பாஞ்சாலி சபதத்தைக் காவியமாகப் பாடி சிறப்புப் பெற்றார் பாரதி என்னும் மகாகவி. அரசியல் விடுதலை, சமத்துவமும் சமவாயப்ப்புகளும் பெற்ற பொருளாதார விடுதலை, சமூக விடுதலை, அறியாமை கல்லாமையிலிருந்து விடுதலை, பெண் விடுதலை ஆகியவை உள்ளிட்டமுழுமையான விடுதலையைப் பெற்ற பரிபூரண சுதந்திரத்தைப் பெற்ற பாரத அன்னையின் முழுமையான விஸ்வரூபத்தை பாரதி தனது தொலைநோக்கில் கண்டான். ஐரோப்பிய ஏகாதி பத்திய வல்லரசுகளின் அரசியியல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவும் இதர பல ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரம் ஜனநாயகம் சமத்துவம் சோஷலிஸம் பெண்ணுரிமை பெண் விடுதலை தலித் மற்றும் கருப்பு இன மக்களின் விடுதலை சம உரிமை அறி யா ைம யிலிருந்தும் கல்லாமை யிலிருந்தும் வறுமை பசி, பட்டினியிலிருந்தும் விடுதலை, மனித உரிமை, மொழி உரிமை, தேசீய இன உரிமை, மனித இனத்தின் வாழும் உரிமை ஆகிய முழுமையான ஜனநாயக உலக வடிவம் தோன்றத் தொடங்கயிருக்கிறது. பாரதியின் சிந்தனைகள் இதற்கு விடிவெள்ளியாக அமைந்திருப்பதை அவருடைய கவிதைகளின் ஆழ்ந்த கருத்துக்களில் காண்கிறோம். பாரதியின் கவிதையில் தமிழ்நாட்டின் தனித்தன்மை பாரதி தமிழ்க் கவிஞன். தமிழ்ப்புலவன் அவன் தமிழில் தனது கவிதைகளைப்பாடினான். தமிழின், தமிழினத்தின், தமிழ் நாட்டின் தனித்தன்மைகளைப் போற்றி மரபு வழியில் நின்று தமிழனுக்கு. தமிழ் மக்களுக்குச் சில தனி ஆணைகளை விடுத்துள்ளான். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்றான் "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல வள்ளுவர்போல இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.