பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | 48 கோள்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். மாசு படாமல் காக்கப்பட வேண்டும்.புல்பூண்டு செடி, கொடி, மரம் முதலிய தாவரங்கள், புழுக்கள் பூச்சிகள், ஊர்வன, பறப்பன நடப்பன முதலிய கால்நடைகள், விலங்கினங்கள் பறவையினங்களையும் அனைத்து உயிரினங்களையும் இயற்கையையும் காக்க வேண்டும் என்னும் குரல் விஞ்ஞான உலகிலும் தத்துவ ஞான உலகிலும் எழுந்துள்ளன. --- "உலகம்ய ாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நிக்கலும் நிங்கலா 3 8% அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! என்பது கம்பன் வாக்கு. ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் என்று கம்பன் குறிப்பிட்டிருப்பது கம்பனின் சிறப்பும் தமிழின் சிறப்புமாகும். இங்கு முத்தொழிலி ல் அழித்தலும் என்று கம்பன் கூறவில்லை. நீக்கலும் என்று குறிப்பிட்டிருப்பது தனிச் சிறப்பாகும். நீக்கல் என்பது இந்தப்பிரபஞ்ச த்திலுள்ள சகல விதமான பொருள்களும் ஒரு நிலையிலிருந்து நீங்கி, மறுநிலைக்கு அ ைவதாகும். அது மாற்றத்தை, நிலை மாற்றத்தைக் குறிப்பதாகும். மாற்றம் என்பது, உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பது இயற்கையானது. இதை இந்திய தத்துவங்களும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. " உலகின் எல்லா தோற்றங்களும் எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும் எல்லா கோலங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா யிர்களும் எல்லா பொருள்களும் எல்லா சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும் எல்லா செயல்களும் எல்லாம் ஈசன்மயம் ஆதலால் ஒன்றுக்கொன்று சமானம் என்று பாரதி தனது பகவத் கீதை மொழியாக்க நூலின் முன்னுரையில் மிக அற்புதமாகக் குறிப்பிடுகிறார். " கண்ன பிரான், மனிதருக்குள் சாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று சொல்லுகிறார் என்றும் பாரதியார் அம்முன்னுரையில் குறிப்பிடுகிறார். "இயற்கை விதிகளை அனு சரித்தே வாழ வேண்டு ம். அதனால் எவ்விதமான தீமையும் எய்தமாட்டாது. எனவே சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானமாகும். இதையே ஆங்கிலேயர் காமன் சென்ஸ் என்பார். சுத்தமான மாசுபடாத கலங்காத, அஞ்சாத, பிழைபடாத சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும். என்றும் பாரதி குறிப்பிடுகிறார்.