பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 149 " வானமுண்டு, மாரியுண்டு, ஞாயிறும், காற்றும் நல்லநீரும், தியும், மண்ணும், திங்களும், மீன்களும், உடலும் அறிவும் உயிரும் உளவே" என்று பாரதி பாடுகிறார். ( மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா என்று விநாயகரிடம் வேண்டுகிறார். "காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்" என்று பாரதி ஜயபேரிகை கொட்டுகிறார். o "வானில் பறக்கின்ற புள் எல்லாம் நான் மண்ணில் திரியும் விலங்கெலாம் நான் கானில் வளரும் மரமெல்லாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் "விண்ணில் எரிகின்ற மீன் எலாம் நான் வெட்ட வெளியின் விரிவெலாம் நான் மண்ணிற்கிடக்கும் புழுவெலாம் நான் வாரியில் உள்ள உயிரெலாம் நான்" என்று பாரதி பாடுகிறார். இது பாரதிதத்துவம் , கலியின் வீழ்ச்சியும் கிருதயுகத்தின் தோற்றமும் பாரதி ஒரு பிரம்ம ஞானி ஜீவன் முக்தர், அவர் ஒரு கர்மயோகியாக வாழ்ந்தார். கடவுள் கர்மயோகிகளில் சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான் என்று பாரதி குறிப்பிடுகிறார். பாரதி தனது சுயசரிதையில் "அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியரசாணை பொழுதெலாம் நினது பேரருளின்