பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 21 பாரத நாட்டின் தலைசிறந்த பேரிலக்கியங்களில் ஒரு பிரிவு இதிகாசங்கள், அந்த இதிகாசங்கள் இரண்டு. அவை இராமாயணமும் மகாபாரதமுமாகும். இந்த இரு இதிகாசங்களிலும் சாதிப்பிரிவுகள் பற்றியும் அதிலுள்ள முரண்பாடுகள் ப்ற்றியும் ஒற்றுமை பற்றியும் பலசெய்திகள் கிடைக்கின்றன. அந்தணர் குலத்திற்கும் அரச குலத்தினர்களுக்கும் இடையிலான மோதலாக வசிட்டர் விஸ்வாமித்திரர் மோதல் தென்படுகிறது. பரசுராமன் என்ற பிராமணன் மிகப்பெரிய மேதை. நான்கு வேதங்களையும் இதர துணை வேதங்களையும் நன்கு கற்றறிந்தவர். கல்வி யில் அறிவாற்றலில் அவருக்கு ஈடு இணையே இல்லை. ஆயினும் அவருக்கும் அரசர் குலத்தவருக்கும் கடுமையான போர்களும் சண்டைகளும் நிகழ்ந்திருக்கின்றன. அவர் தான் கற்றிருந்த அறிந்திருந்த கல்வி அறிவை இதர ஞானத்தை வித்தைகளை பிராமண குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுத்ததாகவும் மற்றவர்களுக்கு பாகுபாடு காட்டி மறுத்ததாகவும் கதைகள் கூறுகின்றன. அந்தப் பரசுராமனின் ஆற்றல் சக்தி அனைத்தும் கடைசியில் இராமனிடத்தில் சென்று விட்டதாகவும் இராமாயணம் கூறுகிறது. இராமன் அரச குலத்தில் பிறந்தவன் திருமாலின் அவதாரம். இந்த இராமன் குகனையும் சுக்கிரீவனையும் வீடணனையும் குல வேறுவாடுகளைக் காட்டாமல் சகோதர்களாக ஏற்றுக்கொண்டதைக் கதையின் வாயிலாக அறிகிறோம். மகாபாரதத்தில் வரும் துரோணாச்சாரியார் மிகப் பெரிய கல்வி மான் சகல வேதங்களையும் வித்தைகளையும் கற்றவர், அறிந்தவர். கல்வி, அறிவில், அறிவின் ஆற்றலில் அக்காலத்தில் யாரும் அவருக்கு இணையாக ஈடாகஇல்லை. இத்துரோணாச்சாரியார் பிராமணர்கள், சத்திரியர் ஆகிய இரு குலங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்வதில்லை என்பதை கதைக் குறிப்பு கூறுகிறது. இத்தகைய குலப் பாகு பாடுகள் வேறு பாடுகள் பற்றிய பல கருத்துக்களையும் கருத்து மோதல்களையும் பழைய சாத்திரங்கள் பலவற்றிலும் குறிப்பாக இதிகாசங்களிலும் புராணக்கதைகளிலும் காண்கிறோம். இத்தகைய சாதிப்பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் எதிர்த்து புத்த மும் சமணமும் சர்வஜன சமத்துவக் கருத்துக்களை முன்வத்ைது வெற்றி கண்டிருக்கிறது. இருப்பினும் பின்னர் ஏற்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள், மீண்டும் சாதிப் பாகுபாடுகளும் வேறுபாடுகளும் இந்திய சமுயத்தில் நிலை பெற்றிருக்கின்றன என்பதையே காட்டு கின்றன. இந்த சாதிப் பாகுபாடுகளும் வேறுபாடுகளும் கொடுமைகளும் இந்திய சமுதாயத்தின் ஒற்றுமையை மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது.