பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 44 அப்போது கர்ணனுடைய கண்கள் கலங்குகின்றன. அவனது உடம்பில்தைத்த அம்புகளால் ஏற்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. நான் அந்திமகாலத்தில் நிச்சயமற்ற நிலையில் போர்களத்தில் இருக்கிறேன். எனது ஆவி அகத்ததோ புறத்ததோ அறியேன். உனக்கு உதவி செய்யும் பக்குவ நிலையில் நான் இருக்கும்போது நீ வந்திருக்கக்கூடாதா என்னிடம் இப்போது எதுவும் இல்லையே, எனது புண்ணியம் மட்டும்தானே இருக்கிறது' என்று கர்ணன் கண் கலங்கி கூறுகிறான்.இந்தப் புண்ணியத்தையே தானமாத் தருமா அந்த பிராமண வேடக் கண்ணன் கேட்டுக் கொள்கிறான். - கர்ணன் பெருமகிழ்ச்சியடைந்து தனது உடம்பில் தைத்திருந்த அம்பினை உருவி அதிலிருந்து வடிந்த ரத்தத்தைத்தாரை வார்த்துக் கொடுத்து தனது புண் ணிய மனைத் தை யும் யாசித்து வந்த கண்ணனுக்குக் கொடுத்துவிட்டான். கர்ணனது புண்ணிய மனைத்தையும் பெற்றுக் கொண்ட கண்ணன் பெரும் மகிழ்ச்சியடைந்து தனது நாராயண வடிவத்தை, உலகப் பெருவடிவத்தைக் காட்டி கர்ணனைக்கட்டித்தழுவி அன்பு நீர்செ ாரிந்து வேண்டிய வரம்கேட்குமாறு கூறினான். அதற்கு கர்ணன் ஆனந்தக் கண்ணிர்விட்டு தான் ஏழேழு பிறவி எடுத்தாலும் இல்லை என்று வருபவர்களுக்கு இல்லையென்று கூறாத இதயம் வேண்டுமென்று கேட்டான். கண்ணன் பெருமகிழ்ச்சிடைந்து எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும் பொருளும் பெற்று இறுதியில் முக்தியும் பெறுவாயாக என்று வாழ்த்தி வரம் கொடுத்து மீண்டான்.அதன்பின்னர் புண்ணியத்தையும் இழந்து தனியனாய் நின்ற கர்ணன் மீது விஜயன் தனது கணையை ஏவி கர்ணனது ஆவி பிரிந்தது. "சாகும் பொழுதில் இரு செவிக் குண்டலம் தந்த தெவர் கொடைக்கை - சுவைப் பாடுமொழியில் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கை" என்று பாரதி கூறுகிறார். கர்ணனின் கருணையும் ஈகையும் கொடையும் பாரத ராணியின் தனிப்பெரும் குணச்சிறப்புகளாகும்.