பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 45 பாரதநாடு படைத்த தலைசிறந்த நூல்களில் ஒன்று பகவத்கீதை. இந்து தர்மத்தில் மூன்று முக்கிய தூண்களில் ஒன்றாக பகவத் கீதை கருதப் படுகிறது. உலகப் பிரசித் தி பெற்ற இந்த நூல் உலகின் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பாரத நாட்டில் பகவத் கீதைக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியவர்களில் சங்கரர், இராமானுஜர், மத்துவர் ஆகிய மூவரும் தலைசிறந்த தத்துவஞானிகளாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள். அர்ஜுனன், தர்மகூேடித்திரமான குரு கூேடித்திரப்போர்க்களத்தில் எதிர்தரப்புப்படையில் தனது பாட்டான்மார், பங்காளிகள், மாதுலர், குரு சிரேஷ் டர்கள் மற்றும் தனக்கு மிகவும் வேண் டிய வர்களும் வணக்கத்திற்குரியவர்களும் நிற்பதைக்கண்டு போர் செய்யமறுத்து தனது ஆயுதங்களைக் கீழே போட்டு சோர்வடைகிறான். "முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர், சோதரர், மைத்துனர், தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய் தன்னருந்தெய்வீக சாரதி முன்னர் "ஐயனே, இவர்மீது அம்பையோ தொடுப்பேன்? வையகத்தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் மெய்யினில் நடுக்கம் மேவுகின்றது வால் கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது. வாயுலர்கின்றது, மனம் பதைக்கின்றது. ஒய்வுறுங்கால்கள், உலைந்தது சிரமும் வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன் எனை இவர்கொல்லினும் இவரையான் திண்டேன் சினையறுத்திட்டபின் செய்வதோ ஆட்சி எனப்பல கூறி அவ்விந்திரன் புதல்வன் கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து சோர்வொடு வீழ்ந்தனன்" என்று பாரதி கூறுகிறார்.