பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 46 இதைக் கண்ட தெய்வீகப் பெருமான் வாசுதேவக்கண்ணன், 'வில்லெறிந்திருந்த வீரனை நோக்கி புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால் அறத்தினைப்பிரிந்த சுயோதனாதியரைச் செறுத்தினி மாய்ப்பது தீமை யென்கின்றாய் உண்மையை அறியாய் உறவையே கருதிப் பெண்மை கொண்டேதோபிதற்றி நிற்கின்றாய் வஞ்சகர், தீயர் மனிதரை வருத்துவோர் நெஞ்சகத்தருக் குடை நீசர்கள் இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராப்பினும் வெம்மையோ டொறுத்தல் வீரர்தம் செயலாம் ஆரிய நீதி நீ அறிகிலை போலும் பூரியர் போல் மனம் புழுங்குரலாயினை அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத்தகைத்தும் பெரும்பதத்தடையுமாம் பெண்மையெங்கெய்தினை பேடிமையகற்று, நின்பெருமையை மறந்திடேல் ஈடிலாப்புகழினாய் எழுகவோ, ஏழுக' என்று மெய்ஞானம் நம் இறைவர் கூற' என்று பாரதி விவரித்துக் கூறுகிறார். பகவத் கீதை வெறும் போர் செய்வதற்குத் துண்டும் நூல் என்று கருதுவது சரியாகாது, பகவத் கீதை ஒரு தலை சிறந்த தத்துவஞான நூலாகும். கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் (செயல், பக்தி, தேர்ந்த அறிவு) ஆகியவைகளை விளக்கும் தத்துவநூலாகும். பகவத் கீதை ம னி த ைன செயலி ல் ஊக்கத்து டன் ஈடுபடத்துண்டுகிறது. மனிதனை, தனது செயலில் பலனை எதிர்பாராது பக்தியுடன் தன்னை அர்ப்பணித்து தியாக உணர்வுடன் ஈடுபடத் துண்டுகிறது. ஒருவன் தனது கடமைகளில் செயலில், முழுமையாக ஈடுபடும்போது அவனுக்கு அச்செயல்பற்றியும்.அது சம்மந்தப்பட்ட சகல துறைகளையும் பற்றிய ஞானம் ஏற்படுகிறது. பாரதி இந்த மகத்தான நூலை நன்கு படித்து கிரகித்தும் தமிழில் மொழி பெயர்த்தும் எழுதியுள்ளார். பகவத்கீதை பாரதியின் தமிழாக்கம் சிறந்த மொழியாக்கமாகும். அத்துடன் அவர் அந்த தமிழாக்க நூலுக்கு ஒரு சிறந்த முன்னுரையும் எழுதியுள்ளார். அம்முன்னுரையே ஒரு மிகச் சிறந்த இலக்கியமாக அமைந்துள்ளது பகவத் கீதை பற்றிய ஒரு சிறிய சீரிய