பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 61 "கண்ணன் எங்கள் அரசன் புகழினைக் கவிதை கொண்டு எந்தக் காலமும் போற்றுவேன்" என்று பாடி பரவசமடைகிறார். திண்ணைவாயில் பெருக்க வந்த என்னை தேசம் போற்றத் தன் மந்திரியாக்கிக் கொண்டான். நித்தம் சோறினுக்காக ஏவல் செயவந்தேன். எனக்கு நிகரிலாப் பெரும் செல்வம் கொடுத்து உதவினான். வித்தை நன்கு கற்பதற்காக எனக்கு வேத நுட்பம் விளங்கிடச் செய்தான். அத்தகைய என் கண்ணபிரான் அருள் வாழ்க, கலியழிந்து புவித்தலம் வெல்க " அண்ணலின் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கிப்புகழில் உயர்க" என்று போற்றி வழிபாடு செய்கிறான். - "எவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித்தன்னுள் ஒடுங்க நின்ற பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி" என்று நம்மாழ்வார் பாடுகிறார். பாரதி கண்ணன் என் சீடன் என்னும் கவிதையில் "யானேயாகி என்னலாற்பிறவாய் யானும் அவனுமாய் இரண்டினும் வேறாய் யாதோ பொருளாம் மாயக் கண்ணன்' என்று மாயக்கண்ணனைத்தனது சீடனாக வரித்துப் பாடுகிறார். என்னைவிட அறிவினிற் குறைந்தவன் போலவும், என்னால் மேம்பாடு எய்தலாம் போலவும் என்கவிதை பெருமையுடையன எனக் கருதுவான் போலவும் கண்ணன் என்னிடம் சீடனாகவந்து சேர்ந்தனன் என்று கூறுவது பாரதியின் கவியுள்ளம். "------ இந்த சகத்திலே உள்ள மாந்தர்க்கு உள்ளதுயரெலாம் மாற்றி இன்பத்திருத்தவும் எண்ணிய குற்றத்திற்காக எனக்கு தண்டனை கொடுப்பதற்காக என்னைப் பலவாறு புகழ்ந்து, எனது கவிதைகளைவியந்து என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தான். கண்ணனைச் சீடனாக் கொண்டு அவனுக்கு பாரதி அறிவுரை போதித்ததாகக் கூறுகிறான். அக்கண்ணனை,