பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 84 விதுரன், அனைத்து நீதிகளையும் அறநெறிகளையும் நன்கறிந்த மகாத்தமா விதுரர் ஒரு போர்நிகழ்ந்து அத்தினாபுரம் அழியாதிருக்க, அத்தனை நெறிகளையும் எடுத்துக் கூறியதை முழுவதும் கேட்ட பின்னரும் அந்த தியாகச் செம்மல் பிதாமகனார் மவுனம் சாதித்தது ஏன்? அது ஒரு புதிரேயாகும். கடைசியில் பிதாமகரின் மவுனம் கலைந்து சபையில் நடந்த அக்கிரமங்களையும் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விட்டுமனார் நியாயப்படுத்திய முறை இன்னும் புதிரானது. விட்டுமரின்சொற்கள் தேசிய இயக்கததில் மிதவாதத்தலைவர்களின் சொற்களைப் போல பாரதிக்குத் தோன்றியது போலும். புதுச்சேரியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பாஞ்சாலி சபதம் என்னும் அந்த அமரகாவியத்தை எழுதினார். அவர் கூறிய வாதத்தைத் தொடங்குகிறார். "தகுதியுயர் வீட்டுமனும் சொல்லுகிறான் தையலே சூதாடி நின்னையுதிட்டிரனே தோற்றுவிட்டான் வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய் சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான் மற்றிதரிைல் உன்னை யொரு பந்தயமாவைத்ததே குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டையுக வேத முனிவர் விதிப்படி நீ சொல்வது நீதமெனக் கூடும்நெடுங்காலச் செய்ததியது ஆனோடு பெண் முற்று நிகரெனவே யந்நாளில் பேணிவந்தார் பின்னாளில் இது பெயர்ந்து போய் இப்பொழுதை நூல்களினை பெண்ணுங்கால் ஆடவருக் கொப்பில்லை மாதர் ஒருவன் தன்தாரத்தை விற்றிடலாம் தானமென வேற்றுவர்க்கு தந்திடலாம் முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை தன்னையடிமையென விற்றபின்னும் தருமன் நின்னையடிமை யெனக் கொள்வதற்கு நீதியுண்டு செல்லுநெறியறியார் செய்கையிங்கு பாத்திடிலோ கல்லுநடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும் செய்கை அநீதி யென்று தேர்ந்தாலும் சாத்திரந்தான் வைகுநெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் ஆங்கவையும் நின்சார்பில் ஆகாவகையுரைத்தேன் திங்குதடுக்கும் திறமிலேன் என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்" என்று விட்டுமன் கூறிய சாத்திரமுறைக்கு பாஞ்சாலிபதில் கூறுகிறாள். கண் கலங்கி நின்று சபைமுன் மீண்டும் கூறுகிறான்.