பக்கம்:பாரம்பரியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை மக்கள் பிதிரார்ஜிதமாய்ச் சொத்துக்களைப் பெறலாம்; அல்லது பெருமலும் இருக்கலாம். ஆனல் பிதிரார்ஜித மாகத் தங்கள் பெற்ருேர்களிடத்திலிருக்தோ அல்லது முற் பட்ட பாரம்பரியமாகவோ உடல் அமைப்பு, மன இயல்பு, செயல் திறமை முதலான அநேகமான தன்மைகளைப் பெற் றுத்தான் தீரவேண்டும். இது பாரம்பரிய கியதி. சுயார் ஜிதமாகச் சூழ்நிலையின் காரணமாகச் சில தன்மைகளும், குணங்களும், திறமைகளும் உண்டாகின்றன. பாரம்பரியமே பிரதானமா? சூழ்நிலையாலேயே எல் லாம் அமைகின்றனவா? பாரம்பரிய நியதிகளில் மாறுதல் கள் ஏற்பட்டு எப்படிப் புதிய வர்க்கங்களும் இனங்களும் தோன்றுகின்றன? சூழ்நிலைகள் எவ்விதம் பாரம்பரிய நியதி களைப் பாதிக்கவோ அல்லது உயிர்கள் முன்னேறவோ செய்கின்றன? உயிர்கள் எப்படிச் சூழ்நிலையைச் சார்ந்து பிழைக்கவும், அல்லது எதிர்த்து கின்று தாக்குப் பிடித்துப் புதிய இனமாக மாறுபாடடையவும் செய்கின்றன? இவ் விஷயங்களைப்பற்றி எல்லாம் அநேக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ததன் பலகைப் பல அரிய உண்மைகளைக் கண்டு பிடித்திருக்கிருர்கள். கிறம், உருவம், உயரம், பருமன், முகவெட்டு, முத லான வெளித் தோற்றங்கள் மட்டும் அல்லாமல் அறிவு, குணம், திறமைகள், ஆயுசு முதலியனவும் வம்ச பாரம் பரியமாக ஏற்படும் இயல்புகள். இவை மட்டுமா? கண் பார்வையின் குறைபாடுகள், மாலைக்கண், கிறக்குருடு, செவிட்டுமை, வழுக்கைத்தலே, ஹிமோபிலியா (சிறுகாயம் பட்டாலும் கிற்காமல் ரத்தம் வடிதல்), காக்கைவலிப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/5&oldid=820441" இலிருந்து மீள்விக்கப்பட்டது