பக்கம்:பாரம்பரியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாரம்பரியம் ஜீன்களிலும் இவ்வாறு பின் காங்குபவை உண்டு. செவிட்டுமைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் முழுச் செவிடர்களாக இருப்பதால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது அகேைலயே பேசவும் கற்றுக் கொள்ள இயலாமல் ஊமைகளாக இருக்கிருர்கள். இம் மாதிரி செவிட்டுமைகளாக இருப்பதும் பாரம்பரியத் தன்மையே. ஆனல் அதற்கெனவுள்ள ஜீன் பின்தாங்கு வது. அதனுல் செவிட்டுமைப் பெண்ணைச் சாதாரணமான ஒருவன் புணர்ந்தால் அதன் பயனுகப் பிறக்கும் குழங்கை கள் சாதாரணமாகப் பேசக்கூடிய குழந்தைகளாகவே இருக்கும். அவற்றின் காதும் நன்ருகக் கேட்கும். ஆனல் இம்மாதிரி பிறந்த குழந்தை ஒரு செவிட்டுமையுடன் சேர்ந்தாலோ அல்லது தன்னைப் போலச் செவிட்டுமைக்குப் பிறந்தவர்களுடன் சேர்ந்தாலோ பிறக்கும் குழந்தைகளில் சில செட்ைேமகளாக இருக்கும். மேலே கூறியவாறு ஓங்கி கிற்பதும் பின்தாங்கி நிற்பதும் எல்லா இடங்களிலும் ஒரேமாதிரி இருப்பதில்லை. எலியைப் பொறுத்த வரையில் கருமை நிறம் முற்றிலும் ஓங்கி நிற்கிறது. முதல் கலப்பினச் சேர்க்கையில் காரெவி கள் தான் தோன்றுகின்றன. ஆனல் ஒரே ஜாதியைச் சேர்ந்த வெள்ளைச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறக்கிற குஞ்சுகள் வெள்ளேயாக இருந்தாலும் சில இறகுகள் மட்டும் சிவப்பாக இருக்கின்றன. இவ்வாறு ஓங்கி நிற்பதிலும் பல காங்கள் உண்டு. சில முற்றிலும் ஓங்கி நிற்கும்; சில ஒாளவிற்குத்தான் ஓங்கி நிற்கும். ஆகவே இதுவரை ஜீன்களின் மூன்று வகையான தன்மைகளைப் பார்த்தோம். சரிசமமாகக் கலப்பது ஒரு வகை. அதற்கு உதாரணம் வெள்ளை, சிவப்பு அங்கிமல்லி கைகள் சேர்ந்து வெண்சிவப்புப் பூ உண்டாவது. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/55&oldid=820447" இலிருந்து மீள்விக்கப்பட்டது