பக்கம்:பாரம்பரியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கி நிற்றல் £5 தன்மை ஓங்கி கிற்பது மற்ருெரு வகை. கா.ொலி வெள் ளெலிச் சேர்க்கையில் கருமையே வெளிப்படுவது. பல பல தாங்களில் ஒரு தன்மை ஓங்கி நிற்பது மூன்ருவது வகை. வெள்ளேச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறந்த குஞ்சுகள் இதற்கு உதாரணம். இவ்வாறு மூன்று வகையாக வகுத்துக் கொண்டு பார்க்கிற போதும் சில சந்தேகங்கள் கோன்றுகின்றன. வெள்ளை நிறமுள்ள ஒரு ஆணுக்கும், கறுப்பு நிறமுள்ள பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளின் நிறம் பல வித மாக அமைகின்றதே, அதற்கென்ன காரணம் கூறுவது? நிறத்திற்குரிய ஜீன்கள் சரிசமமான சக்தி யுடையவை யாயிருந்தால் எல்லாக் குழந்தைகளும் வெண்மையும் கரு மையும் சமமாகக் கலந்த மத்திமமான நிறமுடையனவாக இருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு நிறம் ஓங்கி கின்ருல் அதன்படியே எல்லாக் குழந்தைகளும் இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றி ஒரளவிற்கு ஓங்கி கின்ருலும் அதன்படியே குழந்தையின் கிறமிருக்கவேண்டும். ஆனல் ஆராய்ந்து பார்க்கும்போது வெள்ளே, கறுப்பு இவற்றிற் கிடையே பலவிதமான கலவைகள் உள்ள நிறங்களில் குழந்தைகள் இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன வென்று பார்க்க வேண்டும். மனித நிறக்கோல்களில் நிறத்திற்குரிய ஜீன்கள் மேலே குறிப்பிட்டபடி ஒன் ருென்றுதான் இருக்குமென்பதில்லை; கிறக்கிற்கான பல ஜீன்கள் இருக்கின்றன. ஆதலால் அவைகள் சேரும் போது ஒவ்வொரு தடவையும் பூரித்த அண்டத்தில் ஒரே அளவில் இருக்குமென்பதில்லை. அவை எந்த விகிதத் தில் சேர்கின்றனவோ அவற்றுக்குத் தகுந்தபடி குழந்தை யின் கிறம் அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/56&oldid=820448" இலிருந்து மீள்விக்கப்பட்டது