பக்கம்:பாரம்பரியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ப்ாாம்iரியம் மலர்களையே கொடுக்கின்றது. ஆனல் அதே செடியை 95 டிகிரியில் வளர்த்தால் , வெண்ணிறப் பூக்களை அளிக் கின்றது. தென்ஆப்பிரிக்காவிலுள்ள பச்சைக் கிளிக்கு ஒருவதை மீனின் (Catfish) கொழுப்பை உணவாகக் கொடுத்திால் அதன் பச்சை கிறம் மாறுபட்டு சிவப்பு, மஞ்சள் கிறமுள்ள சிறகுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் சூழ்நிலையால் ஏற்படுகின்ற மாறுபாடுக ளுக்கு எடுத்துக்காட்டாகும். மனிதனைப் பொறுத்த வரையில் இன்னுமொரு முக் கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கருமை நிறத்திற் குள்ள ஜீனே ஒரு பூரித்த அண்டத்தில் இருப்பதாக வைக் துக் கொள்வோம். அப்பொழுது குழந்தையின் நிறம் கருமையாகவே இருக்கும். இதை மாற்ற முடியாது. ஆனல் ஒருவன் கணக்கிலே மிகுந்த திறமைக்குக் காரணமான ஜினைப் பெற்றிருப்பதாகக் கொள்வோம். அகிலிருந்து அவன் பெரிய கணித சாஸ்திரியாவான் என்று நிச்சயம் கூற முடியாது. அதற்குச் சூழ்நிலையின் உதவி தேவை. ஏற்ற பயிற்சி கிடைக்காவிடில் அத்திறமை வெளிப்படாது போய்விடும். அதாவது மனத் திறமைகளைப் பொறுத்த வரையில் சரியான பாரம்பரியம் கிடைத்திருந்தாலும், ஏற்ற சூழ்நில்ை அமையாவிடில் அவைகள் மலர முடியாது. ஆகவே பாரம்பரியம் முக்கியமா சூழ்நிலை முக்கியமா என்ற கேள்விக்கு இதுதான் முக்கியம் என்று ஏதாவ தொன்றைச் சொல்லுவது சரியாகாது. இரண்டும் முக்கி யம் என்றுதான். சொல்ல வேண்டும். மீன் நீந்துவதற்கு அதன் வால் முக்கியமா அல்லது தண்ணிர் முக்கியமா என் முல் எதை முக்கியமென்ற சொல்லுவது? இரண்டில் எது இல்லாவிட்டாலும் மீன் ந்ேத இயலாது. இவைபோலவே பாாம்ப்ரியமும் சூழ்நிலையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/79&oldid=820474" இலிருந்து மீள்விக்கப்பட்டது