பக்கம்:பாரம்பரியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபத்தம் 88 தனது கசை நார்களே உடற்பயிற்சியின் மூலம் பலப்படுத் திக் கொண்டால் அது குழந்தைக்கும் அமையும் என்பதை யும், ஒருவன் வெயிலிலேயே திரிவதால் சிவப்பாக இருக்கும் அவனுடல் கறுத்து விட்டால், அவனுடைய குழந்தைக்கும் அக்கரு கிறம் அமையும் என்பதையும் இக்கொள்கையின் கூற்றுக்கு உதாாணங்களாகக் சொல்ல லாம். ஆனல் இதைச் சரியென்று ஒப்புக்கொள்ள முடியாது. உடற்பயிற்சியோ அல்லது நிறம் மாறுபடுவதோ உடம்பிலுள்ள அணுக்களாகிய சோமாக்களைத்தான் பாதிக்கும். உயிரணுக்களாகிய விந்தனு, அண்டம் இவற் றைப் பாதிக்கா என்று முன்பே கண்டோம். இவைகளின் மூலம் உயிரணுக்களிலுள்ள ஜீன்களில் மாறுபாடு ஏற்பற கிறதென்று வைத்துக்கொண்டாலும், அம்மாறுபாட்டால் அத்தன்மைகளே குழந்தைக்கு அ ைம ய வேண்டு மென்பதில்லை. சடிகி மாற்றத்தில்ை ஏற்படும் பலனுக் கும், அம்மாற்றத்தை உண்டாக்கிய சக்திக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. எக்ஸ் கதிர்களைச் செலுத்தி ஈக்களின் நிறக்கோலிலுள்ள ஜீன்களில் மாறுபாடுகள் உண்டாக்கி இருக்கிருர்கள். அப்படி உண்டாக்கிய மாறு பாட்டால் புதிதாகத் தோன்றிய ஈக்கள் எக்ஸ் கதிர்களை வெளியிடுவதில்லை. அவற்றின் உடலுறுப்பில் ஏதோ ஒரு மாறுபாடுதான் காண்கிறது. வைஸ்மான் (Weismann) என்பவர் இதே விஷயத்தை நிரூபிக்க ஒரு சோதனை நடத்தினர். ஒரே குடும்பத்தில் தலைமுன்ற தலைமுறையாகத் தோன்றிய எலிகளின் வாலை அவர் நறுக்கி விட்டுக் கொண்டே இருந்தார். எத்த னேயோ தலைமுறைகள் ஆனபின்பும் புதிதாகப் பிறக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/94&oldid=820491" இலிருந்து மீள்விக்கப்பட்டது