பக்கம்:பாரி வேள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம் - 93。

பயன்படாத பெண்மையைச் சுமந்துகொண்டு உயிர் வாழ்கிருேம்' என்று அரற்றினர்கள்.

ஒளவையாருக்கே அவர்களுடைய நிலை பொறுக்க முடியாததாக இருந்தது. பெண்ணுள்ளம் பெண்ணுள் ளத்தை அறியும் அல்லவா? அவர்களின் கண்ணைத் துடைத்தார். "என் கண்மணிகளே, நீங்கள் வருத்தப் படவேண்டாம். எல்லாம் இறைவனுடைய ஆணை யின்படி நடக்கும். நாம் வருந்தி என்ன செய்வது!. நான் முன்பே உங்களிடம் வந்து உங்களைப் பார்த்திருக்க வேண்டும். கபிலருடைய பாது காப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை! இப்போதாவது வந்: தேனே என்று ஆறுதல் அடைகிறேன். இனி நீங்கள் கவலையுற வேண்டாம். சென்றவற்றை மறந்து விடுங்கள். பாரியையும் கபிலரையும் மீட்டும் என்னுல் கொண்டு வர முடியாது. அவர்கள் நன்ருக வாழ்ந்தார் கள்; மறைந்தார்கள். உங்கள் வாழ்வு இனிமேல்தான் தொடங்கப்போகிறது. பாரியின் புண்ணியமும் கபில. ரின் தவமும் உங்களைக் காப்பாற்றும். உங்களை இல்வாழ்க்கையிலே நிலைநிறுத்திய பின்புதான் வேறு வேலை பார்ப்பதென்று நான் உறுதி பூண்டு. விட்டேன். இறைவன் திருவருள் துணை செய்ய வேண்டும்' என்று தம்முடைய அன்பையெல்லாம். குழைத்துப் பேசினர்.

ஒளவையாரின் பெருமையை அங்கவையும் சங், கவையும் நன்கு உணர்ந்தவர்கள். அவர் சொல்லுக் குரிய மதிப்பையும் உணர்வார்கள். ஆகவே, அப் பிராட்டியார் இரக்கமும் அன்பும் கொண்டு கூறிய அச் சொற்கள் அவர்களுடைய துயரத்துக்கு மருந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/102&oldid=583920" இலிருந்து மீள்விக்கப்பட்டது