பக்கம்:பாரி வேள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - பாரி வேள்

போல உதவின. இனி யார் நமக்குத் துணை?’ என்று ஏங்கி யிருந்த அவர்களுக்கு ஒளவையாரின் பேச்சு நம்பிக்கையை உண்டாக்கியது. நிழல் இல்லாத பாலை வனத்தில் தனி மரம் ஒன்று கிடைத்தது போல இருந்தது. -

'நீங்கள் என்ன சொன்னலும் அப்படியே செய்ய ஆயத்தமாக இருக்கிருேம். நீங்கள் கைவிட்டுவிட்டால் நாங்களும் கபிலர் காட்டிய வழியைப் பின்பற்ற வேண் டியதுதான்” என்று அவர்கள் ஒளவையாரிடம் தெரி வித்துக் கொண்டார்கள். . -

"இனிமேல் அப்படிப் பேசாதீர்கள். நீங்கள் எல்லா நன்மைகளையும் பெற்று நீடுழி காலம் இன்ப வாழ்வு வாழப் போகிறீர்கள்; மனம் தளராமல் இருங்கள்' என்று சொல்லி, அம் மூதாட்டியார் விடை பெற்றுச் சென்ருர். அதுமுதல் பாரி மகளிருக்குரிய கணவரைத் தேடும் பணியை அவர் மேற் கொண்டார். . . . . .

திருக்கோவலூரைத் தலைநகராகப் பெற்ற நாட் டுக்கு மலாடு என்று பெயர். மலையமான் நாடு என் பதே அப்படி மருவி வழங்கியது. அதை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் மலையமான் என்ற பொதுப் பெயரை உடையவர்கள். சிறந்த வள்ளலாக விளங் கிய மலையமான் திருமுடிக் காரி என்பவன் அந்தக் குலத்தில் உதித்தவனே. அவனும் ஏழு வள்ளல்களில் ஒருவகை எண்ணப் பெறுபவன். அந்த மலையமான் குலத்தில் அப்போது அரசாண்டிருந்த மன்னனுக்கு இன்னும் மணமாகவில்லை என்று ஒளவையார் அறிந் தார். நல்ல குலமாதலின் பாரி மகளிர் இருவரையும் அம் மன்னனுக்கு மணம் முடித்து வைத்துவிடலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/103&oldid=583921" இலிருந்து மீள்விக்கப்பட்டது