பக்கம்:பாரி வேள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம் . 95 என்று ஒளவையாருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்பட்டார். - இறைவன் திருவருள் துணை நின்றமையால்

அவருடைய முயற்சி முதலிலிருந்தே தடையில்லாமல் நடைபெற்றது. கடைசியில் அவர் எண்ணம் நிறை வேறியது. கோவலூர் மன்னன் பாரி மகளிரை மணந்துகொள்ள உடன்பட்டான்.

இந்த மணத்தை நிறைவேற்றும் பொறுப்பு முழு வதையும் ஒளவையாரே மேற்கொண்டார். தமக்குத் தெரிந்த செல்வர்களுக்கெல்லாம் திருமண ஓலை போக் கினர். சேர சோழ பாண்டியர்களையும் திருமணத்துக்கு வரவேண்டும் என்று பாடல்களை எழுதியனுப்பினர்.

திருமணம் மிக்ச் சிறப்பாக நடைபெற்றது. சேர. சோழ பாண்டியர்களும் அதற்கு வந்து சிறப்பித் தார்கள். அங்கவையும் சங்கவையும் மலையமான் குலத் தில் கற்புத் தெய்வங்களாகப் புகுந்தனர். அவர்க ளுடைய தந்தையாகிய பாரியும் ஆசிரியராகிய கபிலரும் இல்லை என்ற குறையை யன்றி, அந்தத் திருமணம் ஒரு குறுநில மன்னனுக்குரிய கல்யாணமாக இல்லா மல் மிக உயர்ந்த முறையில் நடைபெற்றது. எந்தக் கல்யாணத்துக்கும் முடியுடை வேந்தர் மூவரும் ஒருங்கே வந்ததில்லை. பழைய பகையைப் பாராட்டா மல் வரவேண்டும்' என்று ஒளவையார் எழுதியதை மதித்து அவர்கள் இந்த்த் திருமணத்துக்கு வந்து அப் பெண்களை வாழ்த்திச் சென்ருர்கள். . . . . . . .

அங்கவையும் சங்கவையும் பாரியையும் கபிலரை யும் நினையாத நாளே இல்லை. புலவருலகம் அவ்விரு. நல்லோர்களிடையே விளங்கிய அரிய நட்பைப் போற்றிப் பாராட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/104&oldid=583922" இலிருந்து மீள்விக்கப்பட்டது