பக்கம்:பாரி வேள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛8 பாளி வேள்

என்று சொல்லும் அந்தப் பதிகத்திலே மறைமுகமாகச் சுந்தரமூர்த்தி நாயனர் பாரியைப் புகழ்கிருர்! r

பெருஞ்சித்திரளுர் என்ற சங்ககாலப் புலவர் கும ணன் என்ற அரசனைப் புகழ்கிருர், 'ஏழு வள்ளல்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள். அவர்கள் இப்போது இல்லை. அவர்கள் காலத்திற்குப் பிறகு நீதான் இருக் கிருய். ஆதலால் உன்னைத் தேடிவந்தேன்' என்று சொல்கிருர். அங்கே ஏழு வள்ளல்களின் பெயர்களும் வருகின்றன. அவர்கள் பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்பவர்கள். அந்த வரிசையில் முதலில் பாரியைத்தான் வைக்கிருர்.

... " முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும் அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக் கறங்குவெள் அருவி கல்அகலத்து ஒழுகும் பறம்பிற் கோமான் பாரியும் . என்று பாரியைப் பாராட்டுகிருர் முரசைக் குறுந்தடி அடிக்கவும் வெண்மையான சங்கு முழங்கவும் வேந்த ருடனே பொருதவனும், தலைமையையுடைய உயர்ந்த மலைச்சாரலில் ஒலிக்கும் வெள்ளை அருவியானது கல்லை உருட்டிக் கொண்டு ஓடும் பறம்பு மலைக்குத் தலைவனுமாகிய பாரி' என்பது இதன் பொருள்.

ஏழு வள்ளல்கள் என்று தொகுத்துக் கூறுவது மரபு. அந்த எழுவரிலும் பாரியை முதலில் வைத்துச் சொல்வதை மேலே உள்ள பாட்டில் பார்த்தோம். இப் படியே வேறு பலரும் சொல்லியிருக்கிருர்கள். - ஒரு பழைய பாடலில்,

பாரி ஒரி நள்ளி எழினி ஆயே பேகன் பெருந்தோள் மல்யன்என்று எழுவருள் ஒருவனும் அல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/37&oldid=583855" இலிருந்து மீள்விக்கப்பட்டது