பக்கம்:பாரி வேள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இடம்

கபிலரை அவைக்களப் புலவராகவும் உசாத்துணை வராகவும் பெற்றது முதல் பாரி வேளுக்கு முடியுடை மன்னருக்கு இல்லாத மதிப்பு உண்டாகி விட்டது. முல்லைக்குத் தேர் வழங்கிய அருமைச் செயலுக்குப் பின்பு அது பின்னும் உயர்ந்தது. கொடை வள்ளல் களைப் பற்றிப் பேசும் இடங்களிலெல்லாம் பாரியின் பெயரே முன்வந்தது. தமிழ் நாட்டு வள்ளல்களின் பெயர்களை எடுத்துச் சொல்லும் போது புலவர்கள் பாரியையே முதலில் வைத்துச் சொன்னர்கள். புலவர் பெருமக்களில் கபிலருக்குத் தலைமை நிலை கிடைத்தது. போலவே, கொடையிற் சிறந்தவர்களுக்குள் பாரி வள் ளலுக்குத் தலைமை நிலை கிடைத்தது. இந்த வழக்கம் அக்கால முதல் இன்றளவும் இருந்து வருகிறது.

'யார் யாரையோ பாடாமல் சிவபெருமானைப் பாடுங்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் தரமாட்டார் கள். இப்பெருமான் இம்மையில் சோறும் கூறையும் தருவான்; மறுமையில் சிவலோக பதவி வழங்குவான்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகம் பாடியிருக் கிருர், திருப்புகலூர் என்னும் தலத்திற் பாடியது. அது. அங்கே புலவர்களை நோக்கி, -

கொடுக்கிலா தானப் பாரியே என்று கூறினுள் கொடுப் பாரில் என்று பாடுகிருர், வள்ளல்களை உவமையாக எடுத் துச் சொல்லப் புகும்போது பாரியின் நினைவுதான் அவருக்கு வருகிறது. மனிதர்களைப் பாட வேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/36&oldid=583854" இலிருந்து மீள்விக்கப்பட்டது