பக்கம்:பாரி வேள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் பாட்டு

பாரி வேளின் அவைக்களத்தில் எப்போதும் புலவர் பலர் நிறைந்திருப்பார்கள். அந்தப் புலவர் கூட்டத்திற்குத் தலைவராகக் கபிலர் விளங்குவார். பாரியும் உடன் இருப்பான். தமிழின் மாட்சியையெல் லாம் விரித்துப் பேசுவார்கள். அவரவர்கள் தம் முடைய இனிய கவிகளை எடுத்துச் சொல்லுவார்கள். பாரி வேளின் புகழைப் பாட்டில் அமைத்துப் பாடு வார்கள். .

கபிலர் பாரியின் புகழைப் பல வகையில் பாடி மகிழ்ந்தார். ஒரு பாட்டு இரண்டு பாட்டுப் பாடின அளவில் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. பாரியின் அரிய குணங்களில் ஈடுபட்டுக் கிடந்தவராத லின் அவன் புக்ழைப் பாடப் பாட அது விரிந்து கொண்டே போயிற்று. மேலும் மேலும் பாடிக் கொண்டே இருந்தார். புலவர் தலைவராகிய அந்தச் சான்ருேருடைய பாடல்களைப் பெறப் பெறப் பாரி புலவர் உள்ளத்தில் உயர்ந்து நின்றன். மன்னர்களும் அவனுக்குக் கிடைத்த பெரும் பேற்றை எண்ணி வியந்தனர். பாண்டிய மன்னன், நமக்குக் கிடைக்காத பெருமையெல்லாம் இவனுக்குக் கிடைக்கிறது” என்று எண்ணினன்; அந்த எண்ணத்தில் அழுக்காறு தலை நீட்டியது. "விரிந்த சோழ மண்டலத்தைப் பெற்று ஆளும் . நம்மைவிடக் கபிலருடைய பாடல்களைப் பெற்று வாழும் பாரியின் பாக்கியமே பாக்கியம்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/39&oldid=583857" இலிருந்து மீள்விக்கப்பட்டது