பக்கம்:பாரி வேள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலா பாடடு 81☾

சோழன் வியந்தான். 'கபிலர் நம்மையும் பாடமாட் டாரா;" என்று சேர அரசன் ஏங்கின்ை. * . . .

கபிலர் புதிய புதிய முறையில் பாரியின் புகழை அமைத்துப் பாடல்களைப் பாடினர். பாணர்களுடன் வந்து பாடி ஆடும் மகளுக்கு விறலி என்று பெயர். பாணனுடைய மனைவி அவள். அவளைப் பார்த்து, நீ இன்ன செல்வரிடம் சென்று பாடினுல் உனக்குப் பரிசில் தருவான்' என்று பாடுவது ஒரு முறை. அதை விறலியாற்றுப்பட்ை என்று சொல்லுவார்கள். கபிலர் பாரியின் புகழைச் சொல்லும் விறலியாற்றுப் படை ஒன்றைப் பாடினர். . . .

உலகில் உள்ள செல்வர்கள் எப்போதுமே தம்மை அணுகும் இரவலர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. சில காலம் கொடுப்பார்கள்; சில காலம் கொடுக்காமல் இருந்து விடுவார்கள். பாரி அத்தகையவன் அல்லன். அவன் எப்போதும் கொடுப்பவன். எந்தச் சமயத்தில் போனு லும் இல்லையென்னுது ஈயும் வள்ளல். . . . .

இந்தச் செய்தியைக் கபிலர் தம் பாட்டிலே சொல்ல வருகிருர். இதை அப்படியே சொல்லவில்லை; குறிப்பாகச் சொல்கிருர், கவிதையில் ஒரு பொருள் குறிப்பாக அமைந்திருந்தால் அதன் சுவை மிகுதியாக இருக்கும். விறலியே! நீ பாரிவேளிடம் சென்று பாடினல் அவன் உனக்கு நல்ல பொன்னபரணங் களைத் தருவான். அவற்றை நீ அணிந்து மகிழலாம்' என்று சொல்கிருர். இப்படிச் சொல்வதில் சுவை தோன்ருது. மற்ற இடங்களில் செல்வர்கள் கூடவும் குறையவும் தருவார்கள் தராமலும் இருப்பார்கள். பாரி எப்போதும் தருவான் என்ற கருத்தீையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/40&oldid=583858" இலிருந்து மீள்விக்கப்பட்டது