பக்கம்:பாரி வேள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 . . . பார் வேள் பொருத்தவேண்டும். "சுனைகளில் சில காலம் நீர் இருக்கும். சில காலம் குறையும். மழை பெய்தால் தான் அவற்றில் நீர் நிரம்பியிருப்பதைப் பார்க்கலாம். ஆனல் பாரியின் பறம்பு மலையில் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அருவி எப்போதும் நீரோட்டம் அருது வீழ்ந்து கொண்டே இருக்கும்" என்பதை இணைத்துப் பாடினர். செல்வர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பாரி கொடுப்பான்” என் பதையே அவனுடைய மலையில் உள்ள அருவியை வருணிப்பவரைப் போலக் குறிப்பாகச் சொல்லி விட்டார் புலவர்.

சேயிழை பெறுகுவை வாள்துதல் விறலி! தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளே வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினும், அருவி - கொள்உழு வியன்புலத் துமுைக லாக் மால்புண்ட நெடுவரைக் கோடுதோ றிழிதரும் - நீரினும் இனிய சாயல் - பாரி வேள்பாற் பாடின. செலினே.

ஒளியையுடைய நெற்றியைப் பெற்ற விறலியே. சுனையில் தழைத்து வளர்ந்த நீல நிற இதழுடைய குவளையின் வண்டு வந்து மொய்க்கும் புது மலரில் தண்ணிய நீர்த்துளி கலக்கும்படியாக மழை பெய்தா லும் பெய்யாவிட்டாலும், அருவியானது, கொள்ளுக் சேயிழை . செம்பொன்னலான ஆபரணம். கடவு - சுனை, கலித்த - தழைத்த மா - கரிய, சிதர் - துளி. கலாவகலக்க புலத்துழை - கொல்லேயினருகே கால் - சீர் செல் லும் வாய்க்கால். மால்பு - ஏணி. கோடு - பக்கம். சாயல் மிென்மை. பாடினே. பாடி முற்றெச்சம், . . . . . . .”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/41&oldid=583859" இலிருந்து மீள்விக்கப்பட்டது