பக்கம்:பாரி வேள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் பாட்டு - 33

காக உழுத விரிந்த நிலத்தினருக்கு வாய்க்காலாக, தேனெடுப்பதற்காகச் சாத்திய ஏணிகளை உடைய உயர்ந்த மலைச்சாரற் பக்கந்தோறும் இறங்கி வரும்; அப்படி வருகிற நீரைக் காட்டிலும் இனிய மென்மை யையுடைய பாரிவேளினிடம் பாடிக்கொண்டு சென் ருல் செம்பொன்னலான அணிகலன்களைப் பெறுவாய்' என்பது இதன் பொருள்.

. ★

ஒரு நாள் புலவர் பலர் கூடியிருந்த சபையில்

பாரியைப் பற்றிய பேச்சு வந்தது. வெளிநாட்டி லிருந்து சில புலவர்கள் வந்திருந்தார்கள். அவரவர் கள் தங்கள் தங்கள் அநுபவத்தை எடுத்துச் சொன் ஞர்கள். கலைஞரும் கவிஞரும் தம்முடைய ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்ற செய்தியைச் சொன்னர்கள். :பாரிவேள் புலவர்களையும் அறிவுடையோர்களையும் நல்லவர்களையும் ஆதரிக்கும் பெரு வள்ளல். இவனைப் போல் வரிசை அறியும் வள்ளலை நாங்கள் எங்கும் கண்டதில்லை' என்று சிலர் கூறினர்கள். தன்னிடம் வருகிறவர்களை நல்லவர்கள் என்ருே, கலையில் வல்ல வர்கள் என்ருே ஆராய்ந்து கொடுக்கும் இயல்பு பாரி யினிடம் இல்லை. வறுமையில் உழல்பவர்கள் யார் ஆலுைம் அவர்களுக்கு வழங்குவது பாரியின் வழக்க மாகிவிட்டது' என்று கபிலர் கூறினர். அதற்கு உவ மையாகச் சிவபெருமான எடுத்துரைத்தார்.

"நல்ல நிறமும் மணமும் உள்ள மலராகத் தேர்ந்து பறித்துத் தெய்வங்களுக்குப் பூசை செய் வார்கள் அன்பர்கள். சிவபெருமானே மணமுள்ள மலரானலும் மணமற்றதாலுைம் ஏற்றுக்கொள்கிருன், எருக்கம் பூவேயானுலும் எனக்கு வேண்டாம் என்று

3. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/42&oldid=583860" இலிருந்து மீள்விக்கப்பட்டது