பக்கம்:பாரி வேள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரி வேள்

சொல்லாமல் ஏற்றருள்கிருன். பாரியும் அத்தகைய வனே. கலையறிவு இல்லாதவரானுலும், தாம் கற்ற கலையில் போதிய வன்மை படையாதவரானுலும் அவனை அணுகினல் ஏதாவது பெற்றே செல்வார்கள். பாரியின் வள்ளன்மை அத் தகையது' என்று தம் கருத்தை விளக்கினர் அப் புலவர் பெருமான். அதையே பாவாகவும் பாடினர். . . . நல்லவும் தீயவும் அல்ல, குவிஇணர்ப்

புல்லில் எருக்கம் ஆயினும், உடையவை கடவுள் பேனேம் என்னு; ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும் . கடவன் பாரி கைவண் மையே. – * பின் ஒரு நாள் புலவர்கள் கூடிப் பேசிக்கொண் டிருந்தார்கள். கபிலரும் இருந்தார். எல்லோரும் திருப்பித் திருப்பிப் பாரியின் புகழையே எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தனர். பாரி முல்லைக்குத் தேர் ஈந்ததை ஒருவர் பாராட்டினர். அவன் இனிமை யாகப் பேசுவதை ஒருவர் பாராட்டினர். தன்பால் வந்தவர்களுக்கு வரையறை யின்றி வழங்குவதை வேறு ஒரு புலவர் புகழ்ந்தார்.

குடும் பூக்களில் மணத்தால் கல்லவையும் இயவை. பும் ஆகிய மலர் வரிசையிலே சேராமல், குவிந்த கொத்துக் களையும் பொலிவற்ற இலையையும் உடைய எருக்கம் பூவே யானுலும், அன்பர் வழிபடுவதற்குக் கொண்ட அவற்

றைக் கடவுளர் விரும்ப மாட்டேம் என்று சொல்லார். அப்

படியே கலயை அறியாதாரும், வன்மை பெருத குறை யுடையவரும் சென்ருலும் பாரி தன் கொடைத்தொழிலைச் செய்வான். . . . . .

இனர்-கொத்து என்னு என்று பன்மையாகச் சொன் னது. கோயில் பலவற்றிலும் உள்ள மூர்த்திகளே கினைந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/43&oldid=583861" இலிருந்து மீள்விக்கப்பட்டது