பக்கம்:பாரி வேள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் பாட்டு 35

பாரியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர் களே. வேறு ஒருவரும் உங்களுக்கு அகப்பட வில்லையா?” என்று இடைமறித்துக் கேட்டார் கபிலர். அப்படிக் கேட்கும்போது அவருடைய முகத்தில் புன் முறுவல் ஒளிவிட்டது. -

எப்படிப் பேசிலுைம் பாரியினிடந்தான் வந்து முடிகிறது' என்று ஒரு புலவர் சொன்னர். - பாரி, பாரி என்று எப்பொழுதும் ஒருவனையே புகழ்கிறீர்களே. அதை மாற்றி வேறு யாரைப் பற்றியா வது சொல்லுங்கள்' என்று மறுபடியும் கபிலர் சொன்னர். - х

'பாரியைச் சொல்லிவிட்டு வேறு ஒருவரைச் சொல்லுவதாவது!" என்று ஒருவர் கூறினர்.

'நன்ருக யோசித்துப் பாருங்கள். எத்தனையோ வள்ளல்களைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றவர்கள் நீங்கள். பாரிக்கு ஒப்பாக வேறு யாராவது ஒருவரை எண்ணிப் பார்த்துச் சொல்லுங்கள். ஒருவர் கூடவா கிடைக்கமாட்டார்?'

கபிலர் இப்படிக் கேட்டதும் புலவர்கள் சிறிது நேரம் யோசிப்பவர்களைப் போல மெளனமாக இருந் தரர்கள். பிறகு, "பாரியை விட்டால் வேறு யாரும் இல்லையே!' என்ருர்கள், --

"அப்படியா? நான் வேறு ஒருவரைச் சொன்னல் ஒப்புக்கொள்வீர்களா?' என்று கேட்டார் கபிலர்.

நீங்களா சொல்லப்போகிறீர்கள்!" என்று புல வர்கள் வியப்போடு கேட்டார்கள். கபிலர் பாரியின்ரிடம் எவ்வளவு அன்பும் பெரு மதிப்பும் வைத்திருக்கிரும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனல் தான் இப்படிக் கேட்டார்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/44&oldid=583862" இலிருந்து மீள்விக்கப்பட்டது