பக்கம்:பாரி வேள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாளி வேள்

"ஆம், நான்தான் சொல்லப் போகிறேன். எப் போது பார்த்தாலும் பாரி பாரி என்று பலபடியாகப் புகழ்ந்து ஒருவனையே புகழ்கிருர்கள் செந்நாப் புலவர் கள். பாரி ஒருவன்தான உலகைக் காப்பாற்று கிருன்?.......' கபிலர் பேச்சை முடிக்கவில்லை. வேறு யார் இருக்கிருர்கள்? சொல்லுங்கள்' என்று பரபரப் பாகப் புலவர்கள் கேட்டார்கள்.

'பாரிக்கும் அவருக்கும் பெயரில் ஓர் எழுத்துத் தான் வேறுபாடு. உலகு புரப்பதற்கு மாரியும் இருக் கிறதே; அதை மறந்துவிட்டீர்களே. பாரி ஒருவன் மாத்திரம் அல்ல; மாரியும் உலகு புரக்க இருக்கிறதே!"

பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்;: . , மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே. புலவர்கள் கபிலருடைய சதுரப்பாட்டை நினைந்து மகிழ்ந்தார்கள். 'எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். உல கத்தில் உள்ள வள்ளல் யாரையோ சொல்லப் போகி நீர்கள் என்றல்லவா எண்ணினுேம்? பாரியின் புகழை நாங்கள் எல்லாம் சொல்வதைவிட நீங்கள் எவ் வளவோ அழகாகச் சொல்லிவிட்டீர்களே! என்று பாராட்டினர்கள். - -- -- ஆம், கபிலர் பாரிக்கு ஒப்பு மாரியையன்றி வேறு யாரும் இல்லை என்பதையே சமற்காரமாகச் சொன் ஞர். புலவருலகம்.அவர் பாடிய முறையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியது வியப்பாகுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/45&oldid=583863" இலிருந்து மீள்விக்கப்பட்டது