பக்கம்:பாரி வேள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் மறுத்தல்

பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழகிலும் அறிவிலும் சிறந்தவர்களாக இலங்கினர்கள். எப்போதும் புலவர்களினிடையே இருந்து பொழுது போக்கும் தந்தையைப் பெற்றதனுல் அவர்களுக்கு அப்புலவர்களுடைய புலமை நலத்தை உணர்ந்து இன் புறும் வாய்ப்பு இளம்பருவத்திலே உண்டாயிற்று. கபிலர் பாரியோடு வாழத் தொடங்கிய பின்பு அவ்விரு வரும் அவரிடம் தமிழ்ப் பயிற்சி பெற்று வந்தனர். அந்தப் பெரும் புலவரைத் தமிழாசிரியராகப் பெறும் பேறு கிடைத்தபோது அவர்களுக்கு உண்டான தமி ழறிவைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு உணர்ந்தார்கள். கவிதையின்பத்தை நுகரும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது; அது பின்னும் மிகுதியாயிற்று. அவர்களே நல்ல கவிதையை இயற் றும் திறமையையும் அடைந்தார்கள்.

அடக்கமும் அன்பும் அறிவும் அவர்களிடம் நிரம்பி யிருந்தன. பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவ ருடைய அறிவுத் திறத்தையும் கண்டு பாராட்டினர். நல்ல ஆசிரியர் ஒருவர் அவர்களுக்குக் கிடைத்தது போல வேறு யாருக்கும் கிடைக்கமாட்டார் என்று சொல்லிப் புகழ்ந்தனர். அவ்வப்போது புலவர்கள் அவையில் அவ்விரு பெண்களும் இருந்து தமிழ் நயம் தேர்ந்து இன்புற்றர்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/46&oldid=583864" இலிருந்து மீள்விக்கப்பட்டது