பக்கம்:பாரி வேள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் மறுத்தல் 39

அதல்ை பாரி மகளிர் இருவரையும் தன்னுடைய அந்தப்புர அணங்கினரோடு சேர்த்துவிடலாம் என்ற விருப்பம் கொண்டான் பாண்டியன்,

அவனுக்குப் பாரி மகளிரிடம் காதல் உண்டாக வில்லை. அவர்களை அவன் பார்த்துப் பழகியதில்லையே! ஆயினும் அவர்களுடைய புகழ் அவனுடைய உள்ளத் தில் ஆர்வத்தை உண்டாக்கியது. அது மட்டும் அன்று. பாரியின் புகழ் மேன்மேலும் ஓங்கி வளர்ந்து வருவதை உணர்ந்தவன் அவன். அதனுல் அவன் உள்ளத்தில் பொருமைகூட முளைத்திருந்தது இப் போது அவனுடைய உறவு கிடைத்தால் புகழிற் பங்கு பெறலாம் என்று எண்ணினன். கிடைத்தால் பாரி மகளிரை மணப்பது, இல்லையாளுல் அவளுேடு போரிடு வது என்று திட்டமிட்டான். " <

பாரிக்கு ஒலை போக்கினன், அவன் மகளிர் இரு வரையும் தனக்கு மணம் புரிவிக்கவேண்டும் என்ற செய்தியை அவ் வோலையில் எழுதியிருந்தான். பாரி அதைப் படித்தான். கபிலரிடம் காட்டினன். தன் மகளிருக்கும் காட்டின்ை. 'பெறுதற்கரிய பேறு இது' என்று வேறு மகளிர் நினைப்பார்கள். பாரி மகளிர் அப்படி நினைக்கவில்லை. பாண்டியனுடைய அந்தப்புரத்தில் உள்ள மந்தையோடு மந்தையாக வாழும்படி செய்வதற்கு என் அருமைக் கண்மணி களை நான் வளர்க்கவில்லை' என்று பாரி வேள் கூறினன். கபிலர் அவன் கருத்தை ஆதரித்தார். பெண்கள் இருவரும் தம் தந்தையார் கருத்தைத் தெரிந்துகொண்டு களிப்பில் மூழ்கினர். 'அரச பதவி. யும் படையாற்றலும் உடைய கணவர் எங்களுக்கு. வேண்டாம். அன்பும் வீரமும் ஈகைச் சிறப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/48&oldid=583866" இலிருந்து மீள்விக்கப்பட்டது