பக்கம்:பாரி வேள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரி வேள்

உடையவர்களையே எங்கள் தலைவராக நாங்கள் அடைவோம். குடிசையிலே வாழ்ந்தாலும் எங்களை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் காதல் புரியும் ஆட வருக்கே நாங்கள் மாலையிடுவோம்' என்ருர்கள் அவ்விளம் பெண்கள்.

பாண்டியனிடமிருந்து வந்த தூதுவன் மீண்டு சென்ருன் தன் பெண்களை மணம் புரிந்து அளிக்க மறுத்துவிட்டான் பாரி என்ற செய்தியைப் பாண்டி யன் அறிந்தான். பாரி மகளிர் கிடைத்திருந்தால் அவனுக்கு உண்டாகும் மகிழ்ச்சியினும் இரண்டு மடங்கு மகிழ்ச்சி இப்போது உண்டாயிற்று. மகளிரை அளிக்க மறுத்த காரணத்தையே தலைக்கீடாகக் கொண்டு பாரியோடு போர் செய்யலாம் என்ற எண் ணந்தான் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியை ஊட்டி யது. இனிப் பாரியை வளர விடக்கூடாது என்ற தீய எண்ணம் அவன் நெஞ்சிற் குடிகொண்டது.

பாண்டியன் பெண் கேட்டதும் பாரி மறுத்தது. மாகிய செய்தி இரகசியமாக இருக்கவில்லை. அது எங்கும் பரவியது. சேர சோழ மன்னர்களுடைய செவிகளுக்கும் எட்டியது. 'உலகம் புகழும் முடி மன்னனுகிய பாண்டியன் மகளிரைக் கேட்டானென் ருல் பெரும் பேறு என்று கருதி உடனே மணம் புரிய முன் வராமல் மறுத்தானே; இது அவனுக்கு உண் டாகியிருக்கும் செருக்கைக் காட்டுகிறது. தனக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்ற செருக்கு அவன் தலையில் ஏறியிருக்கிறது. அவன் தன் நிலையை மறந்துவிட்டான்' என்று சோழன் சொன்னன். . அவனுக்கும் பொருமை இருந்தது. சேரனும் இப் படியே பாரியை இகழ்ந்தான். முடி மன்னர் மூவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/49&oldid=583867" இலிருந்து மீள்விக்கப்பட்டது