பக்கம்:பாரி வேள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் மறுத்தல் 41

ருக்குமே பாரியின் புகழ் பரவி வருவதில் அழுக்காறு இருந்தது. அவர்கள் ஒன்றுபடுவது மிகவும் அரிது. ஆயினும் பாரியை ஓங்கவொட்டாமல் தகைய வேண் டும் என்ற எண்ணத்தில் மாத்திரம் அவர்கள் ஒன்று பட்டார்கள். எப்படியாவது அவைேடு போர் செய்து அவன் நாட்டைப் பறிக்க வேண்டும் என்ற புன்மதி அவர்களுக்கு உண்டாகிவிட்டது. காரணம் இன்றிப் போர் செய்வது இயலாது. ஆகையால் ஒரு கார ணத்தை ஆராய்ந்தார்கள். பாண்டியன் செய்ததையே தாமும் செய்யலாம் என்று சேரனும் சோழனும் தீர்மானித்தார்கள். பாரியின் பெண்களை மணம் செய்துகொள்ள விரும்பித் தனித்தனியே ஒலை போக் கினர்கள். - -

பறம்பு நாடு பாண்டி நாட்டில் இருந்தது. அணி மையில் இருந்த பாண்டியனுக்கே பெண் கொடுக்க விரும்பாத பாரி மற்ற மன்னர்களுக்கா கொடுக்க முன் வருவான்? வந்த துதுவர்களிடம் அம் மன்னர்களின் முயற்சியை எள்ளிப் பேசி அனுப்பின்ை பாரி. அத ஞல் அவர்களுக்கு அவனிடம் சினம் மூண்டது. சேர சோழ பாண்டியர் மூவரும் பாரியை எதிர்த்துப் போர் செய்வது என்ற முடிவுக்கு வந்தனர். 'இந்தச் சிறிய வேளை அடக்க ஒருவருடைய படையின் ஒரு பகுதியே போதும். ஆலுைம் தமிழ் மன்னர் மூவ ருடைய பகையையும் அவன் பெற்றிருக்கிருன் என் பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? மூவருமே சேர்ந்து படையுடன் சென்று பறம்பு மலையை முற். றுகையிட்டு அவன் மிடுக்கைத் தொலைப்போம்' என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். போர் புரிய ஆயத்தம் செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/50&oldid=583868" இலிருந்து மீள்விக்கப்பட்டது