பக்கம்:பாரி வேள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ற் று ைக

பறம்பு நாட்டு மக்கள் அனைவரும் பாரிவேளுக் காக உயிரையும் அளிக்கச் சித்தமாயிருந்தனர். பாண் டியனும் பிறரும் பாரியின்மேற் படையெடுக்கப் போகி ருர்கள் என்ற செய்தி அவனுக்கு முன்பே எட்டியது. அவனிடம் அன்புடைய மக்கள் தமிழுலகம் முழு வதுமே இருந்தார்கள். அவர்கள் வாயிலாக இந்தச் செய்தி அவனுக்குத் தெரிய வந்தது. பாரி ஈகையிற் சிறந்தவன் என்பதை எந்த அளவுக்கு உலகம் அறிந்துகொண்டதோ, அந்த அளவுக்கு அவன் வீரத் திலும் சிறந்தவன் என்பதை அறிந்துகொள்ளவில்லை. வீரப் பெரு மக்களின் பரம்பரையிற் பிறந்த அவன் குருதியிலே வீரம் கலந்திருந்தது. அவனுடைய நீண்ட கைகளின் பெருமையை ஈகையில்ை உணர்ந்த உலகம், அவனுடைய திண்ணிய தோள்களின் வலி மையை நன்கு உணரவில்லை. இதோ அதை உணரும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. புலவர்கள் அவன் ஈகைத் திறத்தை வெளிப்படுத்தினர். இப்போது முடியுடை மன்னர்கள் அவனுடைய வீரத்தைப் புலப் படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்கள்.

பாரி வலியப் போரை விரும்புபவன் அல்லன்; வந்த போருக்கு அஞ்சுபவனும் அல்லன். அவனிடத் திலும் படைகள் இருந்தன. சிறந்த வீரர்கள் இருந் தார்கள். பறம்பு நாட்டுக் குடிமக்களில் கட்டிளங் காளைகள் பலர் இப்போது பாரியோடு நின்று போர் புரிய முன்வந்தனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/51&oldid=583869" இலிருந்து மீள்விக்கப்பட்டது