பக்கம்:பாரி வேள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுகை 会恐

பறம்பு நாட்டின் எல்லைக்குள் மன்னர்களின் படை நுழையாமல் தடுப்பது எளிதாகத் தோன்ற வில்லை. மூன்று மன்னர்களும் ஒருங்கே கூடிப் படை யெடுத்தால் அவர்களுடைய பெரும்படைக்கு எதிரே நிற்கத் தமிழ் நாட்டில் வேறு படையே இல்லை. ஆயி னும் பறம்பு மலைமீது படை முழுவதும் ஏறிப் போர் செய்வதென்பது இயலாத செயல். ஆதலால் பறம்பு நாட்டைப் பாதுகாப்பதைவிடத் தன் படை முழுவதை யும் பறம்பு மலையின்மேல் கூட்டி வைத்துக்கொண்டு அந்த மலையைப் பாதுகாப்பதுதான் தக்க வழியென்று பாரிவேள் தீர்மானித்தான். கபிலரும் அப்படிச் செய் வதே நலம் என்று கூறினர். . -

தன் பலத்தையும் மாற்ருன் பலத்தையும் அள விட்டு, எவ்வாறு போர் செய்தால் வெற்றி பெறலாம் என்று சூழ்ந்து புகுதல் மன்னர்களுக்கு நன்மையை உண்டாக்கும். பாரி வேள் நன்ருக ஆராய்ந்தான். அவனுக்கு இருந்த படைப் பலம் முடி மன்னருக்கு எதிரே நின்று வெல்லுவதற்குப் போதும் என்று சொல்ல இயலாது. ஆயினும் அவனுக்கு வாய்த் திருந்த பறம்பு மலை எதற்கும் அஞ்சாத நிலையைத் தந்தது. வெளியிலே நெடுகப் பரந்து கிடக்கும் கடல் நீர்ப் பரப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அத ணிடையே ஒரு கப்பல் மிதந்து உள்ளிருப்போரைக் கொண்டு செல்வதுபோல, எத்தனை படைகள் வந்தா லும் பாரியைப் பாதுகாக்கும் வகையிலே பறம்பு மலை இருந்தது. . . . . . . . . . ‘. .

மலைமேலுள்ள அரண்களைச் செப்பஞ் செய்தான்

பாரி. அங்கங்கே மறைவாக நின்று அம்பு எய்யும் துளைகள் இருந்தன. அவற்றை ஏப்புழைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/52&oldid=583870" இலிருந்து மீள்விக்கப்பட்டது