பக்கம்:பாரி வேள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - பாளி வேள்

என்று சொல்வார்கள். அவற்றையும் செப்பனிட் டான். பகைவர் வந்து முற்றுகையிட்டால் படை வீரர்களுக்கு உணவுப் பொருள் வேண்டுமென்று, நெல் முதலியவற்றைக் கொண்டு வந்து மலையின்மேல் சேமித்தான். .

தோள் தினவு கொண்ட வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள். போர் என்ருல் அவர்களுக்கு மகிழ்ச்சி. "இத்தனை காலம் வீணே யிருந்த எங்கள் தோள் வலிமை இப்போதுதான் பயன்படப் போகிறது. எங் கள் பெருந் தலைவனிடம் எங்களுக்குள்ள அன்பைக் காட்டும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது' என்று ஊக்கம் பெற்ருர்கள் அவர்கள். - r

மூவேந்தர் சேனைகளும் பறம்பு நாட்டின் எல்லையை அடைந்தன. பேருக்கு ஒரு சிறு படை அங்கே நின்று வேந்தர் படையை எதிர்த்தது. சில நாழிகைகளில் அந்த எல்லைப் படை சேர சோழ பாண்டியர்களுக்கு வழி விட்டு விட்டது. அம் மன்னர்களுக்குப் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று. இவர்களுடைய எதிர்ப்பு எம்மாத்திரம் இனி நாம் போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலே பாரி நம்மைச் சரணடைவான்' என்றே அவர்கள் எண்ணினர்கள். பறம்பு நாட்டின் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தார்கள். அவர்களை யாரும் தடுக்கவில்லை; வரவேற்கவும் இல்லை. பாரி படையுடன் பறம்பு மலையின்மேல் இருக்கிருன் என்று தெரிய வந்தது. படைகள் அம் மலையை நோக்கிச் சென்றன. அதன் அடிவாரத்தை அடைந்தபோது தான் முடி மன்னர்களுக்கு உண்மை புலனுயிற்று. பாரியைப் போர் செய்யாமலே வென்றுவிடலாம் என்று எண்ணியது பேதைமை என்று விளங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/53&oldid=583871" இலிருந்து மீள்விக்கப்பட்டது