பக்கம்:பாரி வேள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுகை 45

மலையின்மேல் படை அவ்வளவும் ஏறுவது இய லாது. ஏறுகிற வழிகள் சில இருந்தன. அவற்றில் எல்லாப் படையும் ஏறி மலையின் உச்சியை அடைய முடியாது. மலையடிவாரத்தை அடைந்தவுடன் மேலி ருந்து அம்பு மாரி பெய்யத் தொடங்கியது. கற்களும் பாறைகளும் உருண்டு வந்தன. இயற்கையான அர ளுகப் பாரிக்கு அந்த மலை நிற்பதைக் கண்டு மன்னர் மூவரும் மயங்கினர்கள். - r

அவர்களுடைய படை பெரும் படைதான். ஆன. லும் அந்தப் படையின் பலத்தைச் சிறியதாக்கிக் கொண்டு வானளாவ நிமிர்ந்து நின்றது. பறம்புமலை. சில வீரர்கள் மலையின்மேல் ஏறினர்கள். சிறிது தூரம் ஏறுவதற்குள் அவர்கள் பிணமாகி உருண் டார்கள். கீழிருந்து அம்புகளை எய்தார்கள். அவை பறம்புமலைச் சாரலிலே மறைந்தன. எத்தனை படை இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது.

வில்லும் வேலும் வாளும் கொண்ட வீரர்கள் மீனினங்களைப் போல் மலையடிவாரத்தில் வட்டமிட் டார்கள். மலையின் மேலுள்ள கோட்டையை அண் ணுந்து பார்த்தார்கள். அம்புகளை எய்தார்கள். எள் ளளவும் பயன் உண்டாகவில்லை. - இந்த நிலையில், என்ன செய்வது என்ற யோசனை பகை மன்னர்களுக்கு உண்டாயிற்று. மூவரும் ஒருங்கு கூடி ஆலோசனை செய்தனர். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். "நம்முடைய படை களை இந்த மலையைச் சுற்றி நிற்க வைத்து விடுவோம். சில நாட்கள் இந்த முற்றுகை நடைபெறுமானல் கீழிருந்து எந்தப் பண்டமும் மேலே செல்ல முடியாது. மேலே உள்ளவர்களுக்குக் கீழே இருந்துதானே உண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/54&oldid=583872" இலிருந்து மீள்விக்கப்பட்டது