பக்கம்:பாரி வேள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 பாரி வேள்

வுப் பண்டங்கள் போக வேண்டும்? இப்போதைக்குச் சில நாட்களுக்கு வேண்டியவற்றையே அவர்கள் சேமித்து வைத்திருப்பார்கள். நாம் தொடர்ந்து இங்கே முற்றுகையிட்டால் உணவு இல்லாமல் வாடும் நிலை அவர்களுக்கு ஏற்படும். அப்போது வழிக்கு வருவார்கள். சண்டை செய்யாமலே வெற்றி பெறலாம் என்று முதலில் நாம் எண்ணிய எண்ணம் இந்த வகையில் கைகூடிவிடும். மேலே உள்ளவர்களோடு போர் செய்து வெற்றி பெருவிட்டாலும், அவர்களைப் பட்டினி போட்டு வெல்வோம்" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். - -

முடி மன்னர் மூவருடைய படைகளும் பறம்புமலை யைச் சுற்றி முற்றுகையிட்டுச் சில நாட்கள் ஆயின. அங்கங்கே படை வீடுகளை அமைத்துக்கொண்டார் கள் படைத் தலைவர்கள். ஒரு நாள் பறம்புமலையின் மேலிருந்து ஓர் ஒலை வந்தது; அம்பிற் கோத்து அந்த ஒலையைக் கீழே இருந்த பகைவர்களுக்கு அனுப் பினுன் பாரி. அது படை வீரர்களினிடையே விழுந் தது. அதை உடனே எடுத்துக்கொண்டு மன்னர் களிடம் சென்ருர்கள் வீரர்கள். -

ஒலை வந்து விழுந்தது என்ற செய்தியைக் கேட்ட வுடனே மன்னர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தாம் எதிர்பார்த்தபடியே பாரி சரணடைவதற்காக அதை விடுத்திருக்கிருன் என்று எண்ணினர்கள். இனிமேல் சமாதானம் செய்துகொள்வதையன்றி வேறு வழி யில்லை என்பதைப் பாரி உணர்ந்திருப்பான்' என்று சோழன் சொன்னன். இவ்வளவு நாள் காத்திருந் ததே பெரிது" என்ருன் சேரன். பாண்டியன் ஒலைச் சுருளை விரித்துப் படித்தான் மனத்துக்குள் படித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/55&oldid=583873" இலிருந்து மீள்விக்கப்பட்டது