பக்கம்:பாரி வேள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுகை 47

கொண்டான். அதை வாங்கும்போது இருந்த வேகம் இப்போது அவனிடம் இல்லை. அவன் முகத் தில் மலர்ச்சி உண்டாகவில்லை; முன்பே இருந்த ஒளி மங்கியது. "என்ன எழுதியிருக்கிருன்?' என்று மற்றவர்கள் படபடப்பாகக் கேட்டார்கள். பாண்டியன் ஒலைச் சுருளைச் சோழன் கையிலே கொடுத்தான். அவனும் அதில் உள்ளதைப் படித்தான். அவனும் ஒன்றும் பேசவில்லை. சேரனிடம் ஒலையைக் கொடுத் தான். சேரன் அதை வாங்கிப் பார்த்தான். அவனும் வாய் திறவாமல் இருந்தான். அவர்களைச் சுற்றி நின்ற படைத் தலைவர்களுக்கு ஒன்றும் விளங்க வில்லை; அம்மூவருக்கும் வாய்ப் பூட்டுப் போட்ட செய்தி எதுவாக இருக்கும் என்று அவர்கள் மயங்கி ஞர்கள். - -

பாண்டியன் மறுபடியும் ஒலையை வாங்கிப் பார்த் தான்; கூர்ந்து கவனித்தான்.

'இது கபிலர் எழுதிய பாட்டுத்தான்' என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து நழுவின; சூழ நின்ற வீரர்களுக்கு இப்போதும் உண்மை விளங்கவில்லை. 'பாட்டா?' என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். பாண்டியன் ஒலையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த ஒலையில் கபிலர் எழுதிய பாடல் இருந்தது. அந்தப் பாட்டிலே பாண்டியனது மனம் ஆழ்ந்து போயிற்று. தமிழ் வளர்க்கும் குலத்திற் பிறந்தவன் அல்லவா அவன்? இதுவரையிலும் அவன் பாரியையே நினைத்துக்கொண்டிருந்தான். இப்போது கபிலருண்டய நினைவை உண்டாக்கியது அந்தப் பாடல். கபிலரை உசாத் துணைவராகப் பெற்ற பாரியின் பாக்கியத்தை அவன் இப்போது எண்ணிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/56&oldid=583874" இலிருந்து மீள்விக்கப்பட்டது