பக்கம்:பாரி வேள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரி வேள்

பார்த்தான். பறம்பு மலையின் பெருமையைக் கபிலர் பாடியிருந்தார். மதுரைக்குக் கிடைக்காத பேறு இது!’ என்று எண்ணும்போது பாண்டியனுக்குச் சற்றே வருத்தம் உண்டாயிற்று. அந்தக் கவியின் சுவையிலே மனத்தைப் பறிகொடுத்திருந்தான்.

சிறிது நேரம் இப்படி இருந்தான்; படை வீரர்கள் அருகில் நிற்பதைக் கண்டு பழைய நிலையைப் பெற்ருன். ஒலையை அருகில் நின்ற படைத் தலை வனிடம் கொடுத்தான். அவன் அதைப் படித்துப் பார்த்தான். - - - -

கபிலர் ஒரு பாடலை எழுதியனுப்பியிருந்தார். பாரியை எளிதில் வெல்ல முடியும் என்ற எண்ணம் நிறைவேருது என்பதை அதன் வாயிலாகப் புலப் படுத்தியிருந்தார். பறம்பு மலையை எவ்வளவு நாள் சூழ்ந்து முற்றுகையிட்டாலும் தங்களுக்கு உணவுப் பஞ்சம் நேராது என்பதைக் காரணங்களுடன் தெரி வித்திருந்தார். "ஐயோ பாவம்! இந்தப் பறம்பு மலையை நினைக்கும்போதே இரக்கம் உண்டாகிறது. இந்த முடியுடை மன்னர் மூவரும் தன் அடிவாரத்தில் வந்து நிற்க அவர்களுக்குச் சிறிதும் இடங் கொடுக் காமல் இப்படி இருக்கிறதே! இது இரக்கப்பட வேண்டியது அல்லவா?’ என்று பரிகாசத் தொனி யோடு பாட்டை ஆரம்பித்திருந்தார். . . . .

அளிதோ தானே பாரியது பறம்பே' - என்று அது தொடங்கியது. மேலே, அதல்ை தங் களுக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளைப் பாட்டிலே சொல்லியிருந்தார். - - - -

- • பாரியினது பநம்புமல் இரங்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/57&oldid=583875" இலிருந்து மீள்விக்கப்பட்டது