பக்கம்:பாரி வேள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி 芭5 எதைத் தின்ருலும் சோறு தின்றதுபோன்ற திருப்தி உண்டாகவில்லை. பலாப்பழம் அவர்களுக்கு இப் போது சுவையற்றதாகி விட்டது. தேன் தெவிட் டியது. வள்ளிக் கிழங்கு அவர்கள் உள்ளத்தைக் கவர வில்லை. -

இந்த நிலையைக் கபிலர் நன்கு உணர்ந்தார். ஒரு நாள் பாரியுடன் தனித்திருந்து பேசிக் கொண்டிருக் கையில், 'நம்முடைய வீரர்களுக்கு நெல்லஞ் சோற் றில் நாட்டம் அதிகமாக இருக்கிறதுபோல் தோன்று கிறது' என்ருர், -

'இருக்கலாம். இருப்பது இயல்புதான். ஆனல் போர்க்களத்தில் சோற்றையா நினைத்துக் கொண் டிருப்பது?' என்று பாரி கேட்டான். - . . .

போர்க்களமா? நாம் நம்முடைய இடத்தில் தானே இருக்கிருேம்? நீ உன் அரண்மனையில்தானே வாழ்கிருய்? நாள்தோறும் போரா நடக்கிறது? ஒரு வேலையும் இல்லாமல் வாளா இருக்கும் வழக்கம் நம் குடி மக்களுக்கு இல்லை. ஆல்ை, இப்போது இந்த முற்றுகையினுல் அப்படி இருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது.

"அது உண்மைதான். சும்மா இருப்பதல்ை சோற்றின்மேல் ஆசை உண்டாகிறது என்று சொல்ல வருகிறீர்களா?" : ' , -

'ജൂൺ:്, இல்லை. பல காலம் தாம் உண்டு பழகிய உணவில் மக்களுக்கு விருப்பம் உண்டாவது இயற்கை. இங்குள்ளவர்களுக்கு அரிசிச் சோற்றில் ஆசை உண் டானது நியாயந்தான். அந்த ஆசையை நிறை வேற்றுவது நம் கடமை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/64&oldid=583882" இலிருந்து மீள்விக்கப்பட்டது