பக்கம்:பாரி வேள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரி வேள்

கபிலர் இவ்வாறு கூறியதைக் கேட்டுப் பாரி சற்றே மயங்கின்ை. நீங்கள் சொல்லுவது...' என்று தொடங்கி அவன் மேலே சொல்வதற்குள் கபிலரே தொடர்ந்து பேசலானுர். -

"அவர்களுக்கு அரிசிச் சோற்றைச் சமைத்து அளிப்பது நம் கடமை. இப்போது எப்படி அரிசி கிடைக்கும் என்ற சந்தேகம் உனக்கு எழக்கூடும். அது கிடைக்கும்படி செய்யலாம் என்று நம்புகிறேன்." "எப்படிக் கிடைக்கும்?' என்று ஆவலுடன் கேட்டான் பாரி.

இன்னும் சில நாட்களில் நம்முடைய வீரர் களுக்கு அரிசிச் சோற்றை வழங்க முடியும். பாரீசனுக் கும் நெல்லஞ் சோற்றை நிவேதனம் செய்யலாம்.'

கபிலர் உறுதியோடு பேசினர். பேசியபடியே செய்தார். - -

- கிளிகளுக்கும் குருவிகளுக்கும் ஒவ்வொரு நாளும் தினை முதலியவற்றை வீசுதல் பறம்பு மலையில் வழக்கம் என்பதை முன்பே கண்டோம். அந்தத் தானியங்களைக் கொத்தித் தின்ன வரும் பறவைகள் அங்குள்ள மக்களைக் கண்டு அஞ்சாமல் பழகின. அவற் ருேடு கபிலர் பின்னும் நெருங்கிப் பழகினர். பறந்து சென்று அடிவாரத்தில் உள்ள வயல்களை அடைந்து, அங்கிருந்து நெற் கதிர்களைப் பறித்து வரும்படியாகப் பழக்கப்படுத்தினர். நூற்றுக்கணக்கான கிளிகளும் குருவிகளும் இந்த வேலையில் ஈடுபட்டன. ஒவ்வொரு நாளும் நெற்கதிர்கள் வந்து குவிந்தன. அவற்றைக் கொண்டு அரிசிச் சோறு சமைத்து இறைவனுக்கு. நிவேதனம் செய்து வழிபட்டு வீரர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள். • , , " . . . . ‘.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/65&oldid=583883" இலிருந்து மீள்விக்கப்பட்டது