பக்கம்:பாரி வேள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி 57

தம்முடைய மதித்திறத்தால் இந்த அதிசயமான காரியத்தைச் செய்த கபிலரைப் பாரி வணங்கிப் பாராட்டின்ை. வீரர்கள் வியந்து வியந்து புகழ்ந்தார் கள். தமக்கு விருப்பமான சோறு கிடைத்த பிறகு அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

ஒரு நாள் பறம்பு மலையின்மேலிருந்து ஒரு சிறிய பொதி அம்பொன்றிலே கோக்கப்பெற்றுக் கீழே வந்து விழுந்தது. பகைவர்களின் படைவீரர்களிடையே அது விழுந்தவுடன் சிலர் அதை எடுத்துப் படைத் தலைவர் களிடம் கொண்டுபோயினர். அது சோற்றுருண்டை யாக இருந்தது. மேலே இந்தச் சோறு எப்படிச் சென்றது? அவர்களுக்கு நெல் ஏது?’ என்ற கேள்வி களே அவர்கள் தமக்குள் கேட்டுக்கொண்டார்கள். 'சிவபெருமான் பிரசாதம்; நல்ல சம்பா அரிசிச் சாதம்' என்று எழுதிய நறுக்கோலையும் அந்தப் பொதியோடு இருந்தது. - -

அதைக் கண்டபோது அவர்களுக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. அடுத்தபடி மற்ருேர் அம்பிலே கோத்துச் சில நெற் கதிர்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்கப் படையில் உள்ளவர்க ளுக்கு ஒரே பிரமிப்பாகப் போய்விட்டது. மலையின் மேல் வெறும் மூங்கில் நெல்லும் பலாப்பழமும் மட்டும். இருக்கின்றன என்றல்லவா நினைத்தோம்? நெல்கூட இருக்கிறதே! சேமித்துவைத்த நெல்லானுல் இத்தனை நாளைக்குப் பின்னும் இருக்குமா? மலையின்மேல் நெல் விளையும்ா?' என்று அவர்கள் எண்ணி எண் னிப் பார்த்தார்கள். பாரிக்கு மக்களுடைய துணை யைக் காட்டிலும் கடவுளின் துணை நிரம்ப இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/66&oldid=583884" இலிருந்து மீள்விக்கப்பட்டது