பக்கம்:பாரி வேள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. பாரி வேள்

இல்லையாளுல், ஒரு சிற்றரசன் முடிமன்னர்களுடைய படைகள் தன் மலையை இவ்வளவு காலம் முற்றுகை யிட்டிருக்க, அசையாமல் நலியாமல் விருந்து சாப்பிட் டுக்கொண்டு மேலே இருக்க முடியுமா? அவனுக்கு எப்படி இத்தகைய நிலை உண்டாயிற்று? இது பெரிய அதிசயம்! அற்புதம்' என்று வியந்தார்கள்.

பறம்பின்மேல் உள்ளவர்களுக்கு உணவுப் பஞ்சம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை என்ற செய்தியை அங்குள்ள சேனைத் தலைவர்கள் சேர சோழ பாண்டியர்களுக்குத் தெரிவித்தார்கள். "இங்கே நம்முடைய கற்பனைக்கு எட்டாத அற்புதம் நிகழ் கிறது!" என்று தூதுவர்கள் வாயிலாக ஒலை போக்கி ஞர்கள். அதைக் கண்டவுடன் அந்த மன்னர்களே வந்துவிட்டார்கள். வந்து செய்தியை உணர்ந்தபோது அவர்களும் வியப்பதையன்றி வேறு என்ன செய்ய முடியும்?

அவர்கள் வந்திருந்தபோது மீண்டும் ஓர் ஒலே வந்து விழுந்தது. வழக்கம்போல அதில் ஒரு பாட்டு இருந்தது. இந்த முறை பெரிய பாடலாக இல்லை; சிறியதாகவே இருந்தது. . . . .

இந்தப் பெரிய பறம்பு மலையைக் கண்டால் இரக் கந்தான் உண்டாகிறது! இது எத்தனை பேரை வேலை வாங்குகிறது! வேலின் பலத்தைக் கொண்டு இதை வெல்லுதல் மன்னர்களால் முடியாத காரியம். கையிலே பறையை எடுத்து அடித்துப் பாடிக்கொண்டு வரும் பெண்ணுக இருந்தால் இதை எளிதிலே பெற்றுக்கொள்ளலாம்' என்ற செய்தியை அப் பாடல்.

சொல்லியது. - : . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/67&oldid=583885" இலிருந்து மீள்விக்கப்பட்டது