பக்கம்:பாரி வேள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - பாரி வேள்

பறம்பையும் பெறலாம்' என்று அந்தப் பாட்டு மீண்டும் குறிப்பாக அவர்களை இகழ்ந்தது.

அதைக் கண்ட மன்னர்களுக்கு, இனி இங்கே இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டு வந்துகொண்டே இருக்கும். வில்லம்பு வந்தாலும் தாங்கலாம்; இந்தச் சொல்லம்பு நம்மால் தாங்க ஒண்ணுதது. ஒவ்வொரு கவிதையும் பாரியின் சிறப்பைக் காட்டுவதோடு நம்மை இழித்தும் கூறு கிறது. இப்பாடல்கள் தமிழுலகத்தில் பிற்காலத்திலும் வழங்கி, நமக்கு மாளாப் பழியை உண்டாக்கும். ஆத லின், இப்போதே நாம் நம்முடைய முயற்சியைக் கைவிட்டுச் செல்வது நலம் என்ற எண்ணமே தோன்றியது. 'இவனை வேறு வகையில் வெல்வதற் குரிய சூழ்ச்சியைச் செய்வோம். இப்போதைக்குப் பறம்பு மலையை விட்டு அகலுவோம்' என்று தீர்மானம் செய்தார்கள். -

இரவோடு இரவாக மூவர் படைகளும் அவ் விடத்தை விட்டு அகன்றன. மறுநாள் கதிரவன் எழுந் தான். தன்னைச் சுற்றியிருந்த பகைப்படையாகிய மாசு தீர்ந்து பறம்பு மலை தன் வளம் குன்றமல் நிமிர்ந்து நின்றது. பாரி வேள், பறம்பு மலையின் சிறப்பும் கபில ருடைய பாடல்களும் துணை செய்ய, மூவேந்தர் படை களையும் சலிப்புற்று ஓடச் செய்து வெற்றி பெற்ருன்.

  • 'கடந்தடு தானே மூவிருங் கூடி, உடன்றணி ராயினும் பறம்புகொளற் கரிதே, முந்நூறு ஊர்த்தே தண்டறம்பு கன்னடு, முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர், யாமும் பாரியும் உளமே, குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/69&oldid=583887" இலிருந்து மீள்விக்கப்பட்டது